பக்கம் எண் :

6 குசேலோபாக்கியானம்

   அந்தணரும் குறைவு அறுசுகம் பெற - குடம் போலும் மடியினை உடைய
ஆனிரைகளும் அந்தணரும் குறைவற்ற நலமடையவும் ; என்றும் - எந்நாளும்; இடம்
கொள்பல் உலகும் மிகுசுகம் உறுக - இடம் அகன்ற பல உலகத்திலுமுள்ள உயிர்களும்
மிக்க இன்பம் அடையவும்; என்றும் - எந்நாளும் ; ஆரியரும் மோனியரும் திடம்பட
எண்ணும் எண் புரந்திடுக - ஆசாரியர்களும் முனிவர்களும் உறுதியாக நினைக்கின்ற
எண்ணங்கள் யாவையும் (முடித்து) காத்தருள்க.

   (வி - ம்.) கொடியாரைக் கொன்று அடியாரைப் புரக்கும் வன்மையும் சூழ்ச்சியும்
உடையான் திருமால் என்பது தோன்ற அவுணர்ச் சவட்டி, அமுதம் வானவர்க்கூட்டிய
முதலே என்றார். ஆவும் அந்தணரும் மக்களுக்கு நன்மை செய்யும் பொருள்கள்
ஆதலால் அவர்களை முன் வைத்தார் ; அவர்கள் சுகமுறவே உலகமக்கள் யாவரும்
சுகமடைவர் என்ற கருத்தினால் உலகு மிகு சுகமுற என்றார். ஆசிரியர் என்பது
இடைக்குறைந்து ஆரியர் எனநின்றது. மோனமுடையர் - மோனியர். மோனம் - மௌனம்.
வாய் பேசாது மனமடக்கியிருத்தல். ஆசிரியரும் முனிவரும் சுகம் பெற, சுகமுறுகவென்று
எண்ணும் எண் எனப்பொருள் கொள்க. புரந்திடுக என்பது எண்ணங்களை முடிப்பாய்
என்ற பொருளில் நின்றது. 'எல்லாரு மின்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே' என்றதும் காண்க.                          (5)
          அறுசீரடி ஆசிரிய விருத்தம்
     விரும்பும் யாம்வணங் கும்பதக் கடவுளே
          விளங்கும்ஆ வினைமிக்க
     பெரும்பு கழ்ச்சிசால் மறையவர் குழாத்தினைப்
          பேணுக வெனவேதம்
     அரும்பும் வாக்கிய முந்தொழில் ஆறினோர்
          அரும்பும் வாக்கிய முந்தொழில் ஆறினோர்
     அறையும்ஆ சிகளோங்கிப்
          பரம்ப எண்ணுறூஉம் பெரியவர் எண்ணமும்
     பாலிக்க நெடுமாலே.
   (சொ - ள்.) விரும்பும் யாம் வணங்கும் பதம் கடவுளே - விரும்புகின்ற யாம்
வணங்குதற்குரிய திருவடிகளை உடைய இறைவனே; விளங்கும் ஆவினை மிக்க
பெரும் புகழ்சால் மறையவர் குழாத்தினை - விளங்காநின்ற பசுக் கணங்களையும்
மிகப் பெருங் கீர்த்தி நிறைந்த அந்தணர் கூட்டத்தையும்; பேணுக என-காத்தருள்க
என்று, வேதம் அரும்பும் வாக்கியமும்