பக்கம் எண் :

குசேலோபாக்கியானம்7


   தொழில் ஆறினோர் - மறைமொழிகளைக் கூறும் வாக்கியத்தையும் ஆறு
தொழிலையும் உடைய அந்தணர்; சொல்லும் ஆசிகள் ஓங்கி பரம்ப-கூறுகின்ற வாழ்த்து
மொழிகள் நெடிது பரந்து விளங்கும் படி; எண்ணுறூஉம் பெரியவர் எண்ணமும் -
நினைக்கின்ற பெரியோர்களின் எண்ணத்தையும்; நெடுமாலே பாலிக்க - நீண்ட
வடிவினனாகிய! திருமாலே பாதுகாத்தருள்க.

   (வி - ம்.) கடவுளே! நெடுமாலே எனக் கூட்டுக. வேதம் அரும்பும் வாக்கியமும்
பெரியவரெண்ணமும் பாலிக்க என முடிவு செய்க. பாலிக்க - காக்க. பாலிக்க என்றது
வாக்கியத்தையும் எண்ணத்தையும் அதன்படியே நிறைவேறும்படி செய்க என்று
பொருள்கொள்க. பசுக்களையும் பார்ப்பார் கூட்டத்தினையும் காப்பாற்றுக என்பது
வேதத்தின் அரும்பும் வாக்கியம். மறையோர் வாழ்த்தும் ஒலி எங்கணும் பரவவேண்டும்
என்பது பெரியவரெண்ணம், இ்வ்விரண்டும் பாலிக்கவென்றதனால் பசுவும் பார்ப்பாரும்
தீதின்று வாழவும் மறையவர் வாழ்த்தொலி உலகெங்கணும் நிறையவும் செய்க
என்றாராயிற்று. "ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்" (புறம்.9) என்பதும் காண்க.
                                                                      (6)
               மேற்படி வேறு
இளமழக் கன்றை யூட்டி எஞ்சிய தீம்பால் வெள்ளம்
வளமலி கான வைப்பு மருதவைப் பாகப் பெய்யுந்
தளர்வறு செருத்தல் ஆக்கள் தங்குரச் செந்தூள் குஞ்சி
அளவற அடைந்து சேப்ப அவற்றினைப் புரந்தோன் வாழ்க.
   (சொ - ள்.) இளமழ கன்றை ஊட்டி எஞ்சிய தீம்பால் வெள்ளம் - மிக்க
இளமை ஆகிய கன்றினை உண்ணச்செய்து மீந்த பாலின் சுரப்பாகிய
பெருக்கினை; வளம்மலி கானம்வைப்பு மருதவைப்பு ஆக பெய்யும் - வளம்
மிகுந்த முல்லை நிலமானது மருத

நிலம் ஆகும்படி சொரிகின்ற; தளர்வுஅறு செருத்தல் ஆக்கள் குரம்செந்தூள் - தளர்தல்
இல்லாத மடியினை உடைய ஆன்களின் குளம்புகளால் உண்டாகிய செந்தூளிகளானவை;
அளவு அற அடைந்து குஞ்சி சேப்ப - மிகுதியாகப் படிதலால் மயிர்முடி சிவப்
பெய்தவும் (அவைகளின் பின்னே திரிந்து); அவற்றினை புரந்தோன் வாழ்க - அவ்
வானிரையினை மேய்த்துக் காத்தோனாகிய கண்ணபிரான் வாழ்ந்திடுக.

   (வி - ம்,) கானவைப்பு - முல்லைநிலம்: காடும் காடு சார்ந்த நிலமும். மருதவைப்பு-
மருதநிலம்: வயலும் வயல் சார்ந்த நிலமும்.