பக்கம் எண் :

பக்கம் எண் :17

விக்கிரம சோழனுலா

பட்டத்து யானைச் சிறப்பு
 


 

124



128
 
களித்தன வென்றுவக்குங் காற்று - நெளித்திழிய
வேற்றுப் புலத்தை மிதித்துக் கொதித்தமரில்
ஏற்றுப் பொருமன்னர் இன்னுயிரைக் - கூற்றுக்
கருத்தும் அயிரா பதநின் றதனை
இருத்தும் பிடிபடியா வேறித் - திருத்தகக்




 

வரிகள் 124 - 128 : நெளித்திழிய...........பிடிபடியா வேறி

சொற்பொருள் : பகைவர் நாட்டை நெளியும்படி செய்து அவை இழிவடையச் சினந்து மிதித்துப் போர்க்களத்தில் எதிர்த்துப் போராடும் மன்னருயிரைக் கூற்றுவனுக்கு உணவாகச் செய்கின்ற அயிராபதம் நின்றதன் மேல் பிடரியில் அருகில் நின்ற பெண் யானையைப் படியாக மிதித்து ஏறி அமர்ந்து.

விளக்கம் : கொதித்து - சினந்து. கொதித்து வேற்றுப் புலத்தை நெளித்து மிதித்துஇழிய எனக் கூட்டிப் பொருள் கொள்க. பகைவர் நாட்டையழித்து அவருயிரைக் கூற்றுக் கருத்தும் அயிராபதம் என அதன் வீரம் கூறினர் அரசன் கோயிற்புறத்தே வந்து நின்று அங்கு நின்ற அயிராபதத்தின் எருத்தமேல் ஏறினன் எனக் கொள்க.