வரிகள் 642 - 646 : வண்டுசூழ் வேரி........நண்ணுதலும் சொற்பொருள் : வண்டுகள் சூழ்ந்த மணங்கமழும் கூந்தலையுடைய அவள் தன் மனத்தில் வேறுபாடாகக் கண்டு உடல் நிறைந்த மகிழ்ச்சி பொய்யாகும்படி பரந்த மாலையணிந்த வெண்குடை நிழலைச் செய்ய வெற்றியில் உயர்ந்தவள் (விக்கிரமசோழன்) அச்சத்தை தரும் மதயானை மீது உலா வருதலும். விளக்கம் : அப்பேரிளம்பெண் தன்னை விக்கிரமசோழன் வந்து நனவிற் புணர்ந்து சென்றான் என்று எண்ணி மகிழ்ந்தது பொய்யாகும்படி உலா வந்தான். யானைமேற் பவனிவருவது கண்டவுடனே புணரக்கண்டது பொய் என எண்ணினாள் அவள். பின் ஆய்ந்து உண்மை காணுதற்கு அவன் வரவு காரணமாயிற்று எனக் கொள்க. |