வரிகள் 50 - 53 : எங்கோன் .............இவன் பின்பு சொற்பொருள் : எம்முடைய அரசனும் இப் பூமிக்கண் மனு முதலிய பல வேந்தர்களாலும் தவிர்க்க முடியாத சுங்கத்தைத் தவித்தோனும், கவிச் சக்கரவர்த்தியென்ற சயங்கொண்டாராற் பரணி பாடிப் போற்றப்பட்டவனும் ஆகிய முதற் குலோத்துங்கனும் ஆகிய இவர்கள் ஒருவர்பின் ஒருவராக ஆண்டு இவருக்குப் பின்பு. விளக்கம் : எங்கோன், தவிர்த்தோன், பெரியோன் ஆகிய முதற் குலோத்துங்கனும், பூத்தனையோன் (வரி - 2) முதலாகப் போற்றும் பெரியோன், (வரி 53) இறுதியாகக் கூறப்பட்ட மன்னர்கள் ஒருவர்பின் ஒருவராக அரசுபுரிந்து வாழ்ந்து மறைந்தபின்பு எனக் கொள்க. |