சுகம் என்பது நின் பெயர். அப்பெயர் அமைந்த முனிவர் பிறந்தபோதே ஞானியாயினர். கிளி வடிவங்கொண்ட தாய் வயிற்றிற் பிறந்ததும், சுகம் என்ற பெயர் அமைந்ததும், அவர் ஞானியாவதற்குக் காரணம் அன்றோ? ஐந்து வண்ணம் அமைந்தவையே எல்லாப் பறவைகளும், கிளிகளில் ஒவ்வொன்றிற்கு ஐந்து வண்ணமும் உண்டு. பறவைகளெல்லாம் கிளிக்குலமாகிய உன் குலத்துள் அடங்கும். பார்ப்பதிபோலப் பச்சை நிறமுடையாய் மூக்குமட்டுஞ் சிவந்துள்ளது. வாய்குழறிப் பேசுவோரை ஒருவரும் மதியார் ; நீ வாய்குழறிப் பேசினும் மதிக்கின்றனர் ! என்ன காரணமோ? சீவகன் மனைவியரிற் காந்தருவதத்தை மிகவுஞ் சிறப்புடையள் ; அவள் சிறப்படைவதற்குத் தத்தை என்ற உன் பெயரே காரணம் ஆம். உனக்குத் திருமால் பெயரும் சிவன் பெயரும் கற்பித்தால் கற்றுச் சொல்வாய் ; மற்றப் பறவைகட்குக் கற்பித்தாற் பயன் யாது? யோகி தன் கூட்டைவிட்டு வேறு கூட்டிற் புகுகின்றான் ; அவனுயி்ர் மட்டும் கூட்டிற் புகுகின்றது ; நீயோ உடம்புடனே வேறு கூட்டிற் புகுகின்றாய். யோகியிலும் நீ சிறந்த யோகியாவாய். உனக்குக் கீரம் என்று ஒரு பெயருண்டு ; அச்சொல் பால் என்ற பொருளையும் தரும். ஆகையால், உனக்கு ஆடை யுடுத்துவர், பாடகம் காலாழி பூட்டுவார் ; நீயும் ஒரு பெண்கொடி போலிருப்பாய், சுகவடிவு கொண்டது சாயுச்சிய பதவி. அப்பதவி உன் பெயரமைந்த பதவியல்லவோ? உனக்கு வன்னியென்பது பெயர்; அது நெருப்பிற்கும் பெயராயமைந்துள்ளது. நெருப்பிற்பட்ட பொருள் எல்லாம் தூய்மையுடையனவாம் என்று கருதியோ உன் வாய் எச்சிற்பட்ட பழங்களை எல்லாம் இனியனவெனக் கருதி எடுத்துண்கின்றனர்! உன்னைப்போலப் பேசவல்லவர் ஒருவருமிலர். யோகப்பயிற்சியின்றியே என்றும் பச்சைப் பிள்ளையாயிருக்கின்றனை நீ; திருமாலைப்போல நீ பாலனத்தாற் பசி தீர்ப்பாய்; பூசையை விட்டவர் முகத்தில் விழிக்கமாட்டாய் ; மாதர் வளர்க்க வளர்வாய்; உறவில்லாளனைக் கண்டால் அகல்வாய். கருடன்போல இருவடிவு கொண்டாய்; அரங்கர் பெயரையே யுரைப்பாய் ; ஆடவர், மகளிர் | | |
|
|