காமநோய் தீர்க்கும் பச்சிலை மருந்துபோல உன் உருவம் காணப்படுகிறது. காம மயக்கமாகிய காட்டை எரிப்பதற்காக நீ வன்னி எனப் பெயர்பெற்று வந்தனையோ? காமம் என்ற யானையைக் கொல்லவோ அரி எனப் பேர்பெற்றாய்? விரகம் என்னும் படையை வெல்லவோ கிள்ளையெனப் பேர் பெற்றாய்? மாதர் துன்பங்கெடுக்கவோ சுகம் என்ற பேர் பெற்றாய்? உன்னைச் சேர்ந்தவர் துயரம் அடைவாரோ? இரதி கலைமகள் இவர்களுக்கு உன்னை உவமையாகக் கூறுவர் புலவர் என்றால் நீதானே அவர்களினும் உயர்வுடையை ; மாயன் கொடியிலிருக்கும் கருடன் வடிவே உன் வடிவம். உன் சிறகுகள் கண்ணன் குழலூதிய காலத்துத் தழைத்த பசுந்தழையின் நிறமோ அல்லது இராமன் இராவணனை யழித்தபோது வீடணன் சென்று புதிதாக இலங்கையிற் கட்டிய தோரணமோ? நீ பேசுமொழிதான் கண்ணன் வேய்ங்குழலிசையோ? கிளிப்பிள்ளையே! கிள்ளையே! அவந்திகையே! தத்தையே! வன்னியே! அரியே! சுகமே! இமையே! விழியே! விழியிலுறை பாவையே!" என்று விளிக்கின்றாள். |
பாட்டுடைத் தலைவன் புகழ்ச்சி |
நரசிங்க வடிவமாய்த் தூணிற்றோன்றி இரணியன் என்ற அசுரனை உடலைப் பிளந்து கொன்றவன் ; நிலக்காவல் பூண்டவன் ; பூமி முழுவதையும் உண்டவன்; பூதனையென்ற பேய்ப்பாலைப் பருகியவன். உரலிற் கட்டப்பட்டுச் சென்று மருதமரங்களை முறித்தவன். கிள்ளைத்தன்மை நீங்காதவன்; திருப்புயத்தின் அழகுகண்ட மாதர் மடலேறக் கருதுதற் கேதுவாகிய வடிவழகன்; கருங்கல்லைப் பெண்ணாக்குங் காலினான்; "கணிகண்ணன்" என்ற திருமழிசையார் பாடல் கேட்டுப் பாம்புப்படுக்கையைச் சுருட்டிப் பாரமாக முதுகிலிட்டுப் பின் சென்றவன். தேவர்க்காக அமுதங்கடைந்த செங்கையான். சீதையுடன் கானகத்திற்குச் சென்றவன். சரன் என்ற வேடனுக்குத் தன் கால் நகங்களைக் காட்டி அவன் அம்பெய்யும்படி செய்து பின் வீடு |