பக்கம் எண் :

18அழகர் கிள்ளைவிடு தூது


கொடுத்தவன். என் காதல் வெள்ளத்துள் மூழ்கியவன். கடல் வெள்ளத்தில் மேல்
மிதந்தவன். மக்கள் உள்ளத்தில் உள்ளே வந்தமர்பவன். உலகமெல்லாவற்றையுங்
கடந்து நிற்பவன். வெட்ட வெளியில் நின்றும் ஒருவராலும் அறியப்படாதவன்.
கிட்டவிருந்தும் ஒருவர் கண்ணிற்கும் புலப்படாதவன். மாயன் என்ற பெயர்ப்
பொருளுக்கேற்ப எல்லார்க்கும் மறைந்து நிற்பவன். கண்ணன் என்ற பெயர்ப்
பொருளுக் கேற்பத் தன்னை யாவர்க்குங் காட்டுவோன். எங்கும் இல்லையெனவும்,
எங்கும் நிறைந்திருக்கிறான் எனவும் கூறும்படி ஒளித்தும் வெளிப்பட்டும் உறைபவன்.
தன்னையறியாமல் மயங்கும் எனக்குத் தன் வடிவங்காட்டும் தம்பிரான். பழவினையைக்
கெடுத்து மும்மலங்களையும் களைந்து என்னைத் தனியாக இருத்தியவன் ; பிரமனும்
நான், பிரமன் படைத்த உயிர்களும் நான், அவ்விருவரையும் ஏவுவோனும் நான்
என்பதைக் காட்டுவதற்காக, முன் கண்ணனாக மாடு மேய்க்குங் காலத்தில் பிரமன்
ஒளித்து வைத்த ஆன்கன்றுகளும் சிறார்களும் தானேயாகிச் சென்றவன். நரகத்தை
விட்டு நீங்குவதற்கு நீங்கள் தவஞ்செய்யவேண்டா ; என் சங்கொலி கேட்டாற்போதும்.
ஓர் உடலில் உயிரைக் கூட்டுவதற்குப் பிரமன் வேண்டா ; என் வேய்ங்குழலிசையே
போதும் என்று காட்டுவதுபோலத் தன் சங்கினை வாய்வைத்தூதி, அவ்விசை
கேட்டவரனைவரையும் நரகத்தின் விழாது தடுத்தவன் பட்ட மரங்களும் தளிர்த்து,
உயிர் பெறும்படி வேய்ங்குழலூதியவன் பரமபொருள் இவனே, ஆதிமூலம் என்றழைத்த
போதே வந்து, `கசேந்திரன் என்ற யானையைக் காத்தான் என்று யாவர்க்கும்
தெரியும்படி காக்குஞ் செயல் புரிந்தவன் படைப்பவனும் நானே, துடைப்பவனும் நானே
என்று செயலாற் காட்டுவது போலத் தன் உந்திக்கமலத்திற், பிரமனைத் தோற்றுவித்து
உலகைப் படைப்பவன். உகமுடிவு காலத்தில் தன் வாயா லுலகமுழுவதையும்
விழுங்குபவன். நான்கு வேதங்களின் பொருள்களையும் நாலாயிரங்கவிகளாற் பாடிய
ஆழ்வார் பதினொருவருள்ளத்திலும் அமர்ந்திருப்பவன். செந்தாமரை மலரினின்று
வழியுந்