தேன்போலத் திருவடியிலிருந்து கங்கையாறு வடியும்படி உயர்ந்து நின்றவன் ; உலகம் அறிவும் அறியாமையும் உடையது என்பது எவர்க்கும் தோன்றும்படி அறிதுயிலமர்ந்தோன். தாய் அசோதைக்கு வாயைத் திறந்து காட்டி உள்ளே பூவுலக முழுவதையும் காண்பித்துத் தன்உள்ளும் புறத்தும் உலகமிருப்பதை யுணர்த்தியவன், பிறவிக்கடலிற் றோன்றும் அஞ்ஞானமாகிய உவரை நீக்குவதற்கு மேக வடிவங்கொண்டவன். பிற சமயப்போர் என்ற யாறுகள் வந்து கலப்பதற்காகக் கருங்கடலுருவமானவன். தன்னுருவ வொளியில் என்னுருவ வொளியையும் அடக்குவதற்காக நீலமணி நிறங்கொண்டவன்; புவியாகிய ஊசலின் மேலிருப்பவனும் அதனையாட்டுவோனுமாக உயிர்க்குள்ளுயிரா யுறைபவன். வேடர் பார்வை மானைககாட்டிப் பல மான்களைப் பிடிப்பதுபோலத் தன் பிறவி பத்தினால் என் பிறவி யெண்பத்து நூறாயிரமும் தொலைப்பவன்; இடபகிரி என்ற சோலைமலையில் வீற்றிருப்பவன்; சிலம்பாறுடையவன்; தென்பாண்டி நாடுடையான்; சீர்பதியான திருப்பதியான்; பசுந்துளபமாலையான்; அத்துவித மதமாகிய யானையுடையவன்; வேதப் பரியுடையவன்; கருடக்கொடியுடையான்; சிங்கம், யானை, மேகம் ஆகிய மூன்று முரசுடையவன்; அவன் அசையாமல் அணுவசையாது என்று கூறுந் தவநிலையாகிய ஆணையைத் தரித்தவன்; கண்ணனாகப் பிறந்து வெண்ணெயை எடுத்துண்டவன்; சங்குசக்கரந் தாங்கியவன்; உலக முழுவதையும் உண்ட வாயன்; ஒடுங்கிய வயிற்றன்; படைத்த உந்தியான்; அளந்த திருப்பாதமுடையவன்; இரந்து வாங்கிய கையுடையான்; விளையும் பச்சைப்பயிரின் நிறங்காட்டும் திருமேனியுடையான்; பூமியைத் தோண்டிய கொம்புடையவன்; ஏந்திய முதுகுடையவன்; பாம்புப் படத்தைப் பாயாகக் கொண்டோன்; தன் பெயரை நினைத்துத் திருநாமமிட்டவர்க்கு இகத்தும் பரத்தும் இன்பந்தருவோன்; எட்டெழுத்தைக் கருத்திலிருத்திக் கூறித் துதிப்பவர்க்குப் பிரமன் படைக்கும் பிறவியில்லாமற் செய்வோன். ஈசன் முதலிய தேவர் யாவரும் எங்கள் மலையே இதுவென்று வந்து தங்கும் நண்புடையோன் ; பச்சைவாரணதாசருக்குக் | | |
|
|