பக்கம் எண் :

20அழகர் கிள்ளைவிடு தூது


கண்கொடுத்தவன், யானைக்கன்றுக்கும் கண் கொடுத்தவன் அஞ்சு படையுடையான்;
உத்தியோகச்சக்கரமுடையவன்; முன்பு பொன்னிலங்கையை வெற்றியாற் பெற்றுப்
பூவுலகை மாவலிபால் இரந்து வாங்கியவன்; திருவரங்கத்தில் உறையும்
பெருமாளைப்போல ஆண்டாளுக்கு அன்றி எவர்க்கும் பூமாலை கொடாதவன் ;
சங்கத்தழகன் எனப்பேர் பெற்றவன் ; திருப்பாதுகைக்கும் கருடனுக்கும் அரசுதந்தவன்;
சவுந்தரவல்லியுடனியைந்த சுந்தரராசன் இவன் என்று சொல்லும் படி விளங்குவோன்;
சுந்தரத்தோளன்; மலையலங்காரன் என்ற பெயருடையவன் ; புண்ணியங்கள் வந்து
பூசிக்கத் தெய்வமாய் நின்றவன்; மலையத்துவசனுக்கு வேண்டும் வரம் தந்தவன்;
அம்பரீடனுக்குத் தன் பாதமலர் தந்தவன்" என்று அழகரைப் புகழ்ந்து கூறினள்
அத்தலைவி.

கோடைத் திருவிழா

   அழகர் கோடைத் திருவிழாக்காலத்தில் எழுந்தருளினர். சோலைமலையிலிருந்துவந்த
வெள்ளமெல்லாம் வையையிற் சென்று தேங்கியதுபோல அத்தலத்து மக்கள் யாவரும்
வையையாற்றங்கரை வந்தெய்தினர். தல்லாகுளம் வந்து சார்ந்தனர் அழகர். பின்னர்ச்
சோமச்சந்திர விமானத்தில் ஏறி வையைக்கு வந்து சேர்ந்தார். மண்ணுலகின்மேல்
விண்ணுலகம் வருகின்றதோ? இந்திர விமானமோ? அட்டாங்க விமானமோ? என
ஐயுற்றுப் பின் அவருக்குரிய சோமச்சந்திர விமானமே இதுவென்று கண்டோர் கூறும்படி
இருந்தது அக்காட்சி. அப்போது சூரியனுதித்தான் ; அத்தோற்றம் அவ்விமானந்
தாங்குவோர் பலமாகத் தூக்கும்போது பாரம் சேடன் முடியை அழுத்த, அதனால்
அவன் முடியிலிருந்து ஒரு நாகமணி தெறித்து மேலெழுந்ததுபோலிருந்தது. குதிரை
நம்பிரான்மேல் அழகர் ஏறிச்சென்று கோடி செங்கதிரும் கோடி வெண் மதியும்
உதித்தன போலச் செம்பொற்கொடியும் வெண் குடையும் தோன்றவும் மேகமும்
இடியும்போல யானையும் அதன் மேல் ஏறிய முரசமும் முழங்கவும், நீர்வீசுந் துருத்தி