பக்கம் எண் :

ஆராய்ச்சி உரை21


மலைபோல் நீரைச் சொரியவும், கேட்ட வரத்தை யன்பர் கட்குத் தருங் கிணறுபோலக்
காணிக்கை வாங்கிக் கோடிக் கணக்கான கைகள் போடுவதற்கிடமாகிய ஆணிப்பொற்
கொப்பரை முன் வரவும், மக்கட்கூட்டம் வையையாற்றுட் பரந்துநின்று வெள்ளங்
கரைகடந்ததுபோலக் கரையேறி நெருக்கமாக நிற்கவும், அக்கரையின்பாலுள்ள
ஆயிரக்கணக்கான திருக்கண் மண்டபங்களிற் சென்று சென்று தங்கிப் பின் வண்டியூர்
மண்டபம் வந்து சேர்ந்தார். பகல் மறைந்து இரவாயிற்று. ஆதிசேடன் வாகனமாகி
அழகரைத் தாங்கப் பவனிபுறப்பட்டார். முன் அழகர் பகலை இரவாக்கினர். இப்போது
இரவைப் பகலாக்கினர் என்று கூறும்படியும் தீக்கடவுள் வந்து சேர்ந்ததுபோலவும்,
சந்திரன் வந்து சார்ந்து பணிவதுபோலவும், இரவில் கைத்தீவட்டிகளும்,
வாணக்காட்சிகளும் இருளைப்போக்கி ஒளியையாக்கி இலங்கின. அவ்வமயம்
விளக்கொளியோடு ஒளிமயமாய்ப் பவனிவந்த திருமாலைக் கண்டேன் என்றாள்.

தலைவி தன்னிலைமையைக் கிளிக் குணர்த்துவது

   பின்னர் அழகரை வணங்கினேன். முன்னழகைக் கண்டவுடன் மோகமுற்றேன்.
பின்னழகைக் கண்டாற் பெருந்துன்பம் விளையும் என்று கருதி மற்றைப் பெண்களை
நோக்கி, "நான் எழுந்தேன் ; திருமுகமும் அவன் மார்பில் உறையும் திருமுகமும்
கண்டேன்". அருகில் நின்ற மாதரை நோக்கி, "இவனை அரவணையான் என்று
கூறுவர். அன்றியும், சிவனைப்போல இரவணையான் என்று கூறுவதும் உண்டு, பரவைத்
திருவணையான் என்பதுமட்டும் பொய் என்று கூறினேன்." பின் அழகரை நோக்கி,
"வெண்ணெய் திருடியதுபோல வளையலையுங் களவு செய்தீரோ? மங்கையராகிய
எங்கள் கொங்கை மலைமேல் விழுங்கண்ணருவி சோலை மலை யருவிபோலக்
குளிர்ச்சியாயிருக்கிறதோ? எங்கள் சேலையையுந் திருடினீரே! பழைய திருட்டுத்
தொழிலைத் தொடுத்துச் செய்யத் துணிந்தீரோ? நாங்கள் கூறு மொழி
செவியிலேறவிலையோ? பாற்கடலிற் றூங்கியதுபோல