பக்கம் எண் :

விளக்க உரை69


என்றும், கிள் என்ற முதனிலை ஐயுருபு ஏற்றுநின்ற தெனக் கொண்டு கிள்ளுதலைச்
சேராத பெரிய கொங்கை பயனற்றது எனவும், வெளிப்பொருள் இருவகையாகக் கொள்க.
தனம் - செல்வம், கொங்கை. "செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்" என்பதும்,
"கொழுநர் கைந்நகமேவு குறியை முன் செல்வமில்லாத அவர்பெற்ற நிதிபோல்"
என்பதும் காண்க.

32-35: தெரியுங்கால் தேறுகனி.............வாயுண்டோ


   (சொ - ள்.) ஆராய்ந்தால் தெளிவாகிய பழங்கள் நீ விரும்பாவிடில் காவில் உள்ள
தேனைச் சிந்துகின்ற சக்கையாக விரிந்து வீணாகும். நீ விரும்பினால் அப்பழங்கள்
பெருமை பெறும். சொல்லத் தொடங்கினால் அன்னம் உன்னுடைய உணவல்லவா?
செழித்த குயிற் பறவையும் மன்மதனுடைய சின்னத்தின் உருவமானதல்லவா?
ஊதுவதற்குள் பறந்து போய்விடும் அது. (இவைகளிடத்தில் என் குறையைச் சொல்வது)
என்ன பயன் தரும்; பழைமையான வண்டுக்கூட்டமும் முடிச்சு அவிழ்க்கும்
இயல்புடையன; என்றாலும் மதுவையுண்ட பின்பு வாய் திறப்பதும் உண்டோ?
(இல்லையே!)

   (வி - ம்.) கா - சோலை. வேரி - தேன். சிந்து கோது ஆ - சிந்துகின்ற
சக்கையாக. கன்னி காவேரி சிந்து கோதாவிரியும் நீ விரும்பினால் வீறுபெறும் என
வெளிப்பொருள் ஒன்று தோன்றல் காண்க. அன்னம் உன்னுடைய உணவுப்பொருள் -
குயில் சின்னவடிவு; ஊதினாற் பறந்துபோம் தன்மையது. வண்டுகள் அரும்பை
விரியும்படி செய்யும். அதுவரையும் ஒலிக்கும் தேன் உண்டால் மயங்கி்க்கிடக்கும்.
முடிச்சு என்பது அரும்பை. அவிழ்க்கும் - விரிக்கும். முடிச்சை அவிழ்க்கும்
வலிமையுடையதாயினும் பேசுந் திறமில்லை என வெளிப்பொருள் பிறவற்றிலுங் கொள்க.

35-38: எதிரும் கரும்பு உறா வார்த்தை ......... தெளித்தாயோ


   (சொ - ள்.) நேர் வருகின்ற கருமையான புறாவின் குரல் கேட்டால் கசப்பு என்று
சொல்லவரும்; அத்தகைய புறாவுக்கும் ஒரு வாய்ச்சொற் பேசுவதற்கு இடமுண்டோ?
(இல்லையே) யாவரும் விரும்புகின்ற மயில் பொருந்தும் பிணிமுகம் என்ற
பெயருடையது. உன் போலச் சுகவடிவங்