வாசுகி என்ற பாம்பு நாண், திருமால் அம்பு, அதன் கூர்மை தீ என இங்ஙனம் ஆக்கிக் கொண்டார் என்பது புராண மரபு. அதனால் வேதமாகிய குதிரைக்குப் பிரமன் சாரதி என்றார். காமன் நிறம் கருமை. வண்டின் நிறம் கருமை, குயிலின் நிறம் கருமை. ஆதலால் தீப்பட்டுக் கருகினவாகக் கற்பித்தார். கிளி பசுமையாக இருத்தலாற் சூடுபடாமல் வந்ததாகக் கூறினர். மாக்காய்க்குங் கனியல்லாற் காய் பூ என்றால் நாக்கு மூக்கும் அறுப்பாய் என்பதற்கு மாவிற் பழுத்த பழமென்று சொல்லாமற் காய் பூ என்று யாரேனும் கூறினால் அவர்களது நாக்கையும் மூக்கையும் அறுத்து விடுவாய் என மற்றுமொரு பொருள் தோன்றுதல் காண்க. ஆக்கம்.........அகலாய் என்பதற்கும் செல்வம் நீங்காமல் நன்மையாகிய வரத்தைக் கொடுக்கும் திருமால் அடியை விட்டு நீ நீங்காமலிருக்கிறாய் எனவும் சிலேடையமைந்துள்ளதையுங் காண்க. 44-47 : மனைக்குள் இதமாய் .............பேறுண்டோ (சொ - ள்.) வீட்டினுள்ளே வாழும் மனிதர்களுடன் நன்றாகப் பழகுவாய்; அன்புடனே அண்ணன் அக்காள் என்ற முறைகூறி எவரையும் அழைப்பாய்; 'கள்ளையுண்டு வண்டுப் பிள்ளை வாய் குழறிப் பேசும். மாமரத்திலேறிச் செருக்குள்ள பிள்ளாயாய் அழகிய குயிற் பறவையும் கத்தும். கிளிப்பிள்ளை நாம் சொன்ன சொல்லைத் தவறாமற் சொல்லும்' என்று மனிதர்கள் சொல்லும்படி நல்ல பெயர் பெற்றாய்; இனி அதனைப்போல வேறும் ஒரு பேறு உள்ளதோ? (இல்லை.) (வி - ம்.) அளிப்பிள்ளை களிப்பிள்ளை கிளிப்பிள்ளை என மூன்று பிள்ளைகளை எடுத்துக்கூறிக் கிளிப்பிள்ளைக்குச் சிறப்பை எடுத்துக்காட்டினர். அளி - வண்டு. களி - செருக்கு. அளிப்பிள்ளை மதுவுண்டு மயங்கி வாய் குழறும். பூங்குயிற் களிப்பிள்ளை மரத்திலேறிச் செருக்கினாற் கண்டபடி கத்தும். கிளிப்பிள்ளை மக்கள் சொன்னதையே சொல்லும் என்பார்; ஆதலால், நீயே சிறந்தாய் என்றபடி. ஆம்பரம் - மாமரம். அதை என்பது அத்தை என விரிந்து நின்றது. 47-50 : அன்னம் இன்றிப் பால் குடிக்கும்..........இயம்பாய் (சொ - ள்.) சோறுண்ணாமலே பாலைக் குடிக்கின்ற பச்சைக் குழந்தையார் நீ யிருந்தாலும் உன்னுடைய | | |
|
|