பக்கம் எண் :

72அழகர் கிள்ளைவிடு தூது


காலைப்பிடிப்பார் கோடிபேர் உளர் என்று நீ கண்டாயல்லவோ? மயக்கம் பிடித்த
மங்கையர், கையில் வில்லேந்திய மன்மதனால் வருந்தும் காதல் நோயைத்
தீர்ப்பதற்காகவோ பச்சையிலை போன்ற வடிவத்தைப் பெற்றிருக்கின்றாய்? அஞ்சுகின்ற
நெஞ்சமுடைய அப்பெண்கள் காமமாகிய காட்டை எரிப்பதற்கோ நீ வன்னி என்ற
பெயர் பெற்றாய்? காரணத்தை விளக்கிச் சொல்வாய்.

   (வி - ம்.) கிளி சோறி்ருந்தாலும் அதனை விடுத்துப் பாலைக் குடிப்பதில்
விருப்பமுடையது ஆதலால் "அன்னமின்றிப் பால் குடிக்கும் பச்சைக் குழந்தை"
என்றார். மக்கள், மூப்புப் பருவமடைந்து பெருந்தவமும் துறவும் உடைய பெரியவரைக்
கண்டாற் காலைப்பிடித்து வணங்குவது இயல்பு. குழந்தையாயிருந்தும் கோடிபேர் உன்
காலைப் பிடிப்பார்கள் என்றால் உன் பெருமையைக் கூறுவது எப்படி முடியும்? எனச்
சிறப்புத் தோன்றுவது காண்க. பச்சிலை மருந்துகளால் நோய் தீர்வது போல் உன்னால்
மாதர் காமநோய் நீங்கும் என்பதை விளக்கப் "பச்சிலை ரூபம் படைத்தாய்" என்றார்.
வன்னி - கிளி. இது நெருப்பையும் உணர்த்தும் ஆதலால் "மால்வனஞ் சுடவோ
வன்னியெனப் பேர் படைத்தாய்" என்றார். மால் - காமமயக்கம். மால் வனம் - காமம்
ஆகிய காடு. காமமயக்கமுற்ற காரிகையார் தங்கரத்திற் கிளியை எடுத்துவைத்து
அதனுடன் பேசி இன்பப் போதுபோக்கும் இயற்கையைக் குறிப்பது இது.

50-53 : அனத்தை நிலவோ.............சொல்வாய்?

   (சொ - ள்.) அன்னப் பறவையைக் கண்டு இது நிலவோ என்று மயக்கத்தாற் கூறி
வருந்தும் மகளிருடைய துன்பமாகிய யானையைக் கொல்வதற்காகவோ நீ அரி என்ற
பெயர் வடிவைக் கொண்டாய் ; விற்போன்ற நெற்றியுடைய மாதர்களின் மிகுந்த விரகம்
என்ற கொடிய சேனையை வெல்வதற்காகவோ கிள்ளை என்ற பெயர் வடிவு
கொண்டாய். வன்மையுடையாய்! நீ மிகவும் மனமுடைந்த காதல் மகளிர் துன்பத்தைக்
கெடுக்கவோ சுகம் என்ற பெயரின் வடிவு கொண்டனை, நீ சொல்வாய்,

   (வி - ம்.) காம மயக்கமுடையவர் நிலவைக் கண்டாற் பயந்து நெருப்பு என
அஞ்சுவர் ; இரவில் அன்னப்பறவை பறந்தாலும் நிலவுதான் என்று மயக்கத்தாற்
கூறுவர். இது காமங் கொண்ட மகளிர் இயல்பு என்பதை விளக்க