"அன்னத்தை நிலவோ என்பார்கள்" என்றார். அரி வடிவம் என்றது சிங்க வடிவு என்றும், அரி என்ற பெயர் என்றும் பொருள்படும். அரி என்பது கிளி்யின் பெயர்களில் ஒன்று ; சுகம் என்பது கிளியின் பெயர்களில் ஒன்று, ஆதலால் துன்பத்தைக் கெடுக்க நீ சுகம் என்ற பெயரைப் பெற்றாய் என்றார். 53-56 : தகவுடைய தத்தை ...........சுத்தீகரிக்கலாம் (சொ - ள்.) அறிவுடைய கிளியைப் பெற்றிருப்பவர்கள் யாதோர் இடையூறும் அடையமாட்டார் என்று யாவரும் சொல்லும்படி கல்வியைப் பெற்றிருக்கின்றாய் ; உன்னைப் புகழவல்லவர் ஒருவருமிலர் ; இயல் இசை நாடகம் என்ற முத்தமிழ் பயின்ற புலவர்கள் பெருமைபெற்ற இரதிக்கும் கலைமகளுக்கும் உன்னை உவமானப்பொருளாகக் கூறுவர் என்னில், அவர்களுயர்ந்தவர்களா? நீ உயர்வுடையையா? உரைப்பாய். ஊரார் அறியும்படி சுடுநெய்யிற் கையை வைத்தும் நீதான் பசுமை நிறமுடையாய் (உனைப் போலப் பசுமையுடைய) வேறு பொருள்கள் இல்லையென்று கையை நீட்டித் தூய்மையாகச் சூளுற்றுச் சொல்லலாம். (வி - ம்.) கிளி வளர்ப்பவர்கள் அதனோடு பேசி அதன் சொல்லைக் கேட்டு அதற்குப் பாலூட்டித் தமது முன் கையில் வைத்து இன்பப்பொழுதாக நாள் கழிப்பர் ; ஆதலால் அவர்களுக்குத் துன்பம் வந்தாலும் கிளியைக் காண இன்பமாகவே தோன்றும் என்ற கருத்தால் "தத்தை யடைந்தவரே தத்தை யடையார் என்னும் வித்தை யடைந்தாய்" என்றார். வித்தை என்றது பேசுங் கலையை. தத்து - இடையூறு ; தத்து+ஐ=தத்தை என இரண்டனுருபேற்றது இது. தத்தை -கிளி. உவமிக்கும் பொருள் உயர்வுடையது ஆதலால், மாரதியினும் பாரதியினும் நீ உயர்வுடையை என்பது கருத்து. சுடுநெய்யிற் கை வைத்து மெய் கூறுவது பண்டைக்கால மக்கள் இயல்பு. பொய்யுரைப்பார் கை வெந்துவிடும் என்பதும், உண்மையாயிற் சுடாது என்பதும் அவர் கண்ட உண்மை. இது குறித்து நெய்யிற் கையிட்டாலும் நீதான் பசுமை ; உன்னைக்காட்டிலும் பசுமையுடைய பொருள் ஒன்றுமின்று என்று துணிந்து கூறலாம் என்றார். 56-59 : மெய்யின் வடிவும் ..........தோரணமோ (சொ - ள்.) நின் உடம்பின் சாயலும் வளைந்த அழகிய மூக்கும் திருமால் கொடியின் மேலிருப்பவராகிய | | |
|
|