கருடாழ்வாரின் கூறோ, நீண்ட திருமால் மூங்கிலே யறுத்து ஊதுகின்ற குழலிசையிற் பண்டைக்காலத்திற் றளிர்த்த பச்சையிலையின் நிறமோ நீ கொண்டிருக்குஞ் சிறகுகள் ; அன்றியும், இருள்போலத் தோன்றும் உடலுடைய இராவணனை அக்காலத்திலழித்துப் பின் அவன் தம்பியாகிய வீடணன் சென்று பழைமையான இலங்கை நகரத்திற் கட்டிய புதுமையான தோரணமோ? (நானறியேன்) (வி - ம்.) மாயனுக்கு ஊர்தியும் கொடியும் கருடனாதலால் "கொடியிலிருப்பவர்" எனவே கருடாழ்வாரை யுணர்த்திற்று, "தங்கூறோ" என்பது அவரது வடிவின் சாயல்தான் அப்படியே யமைந்துள்ளதோ எனப் பொருள்தந்தது. கூறு - பங்கு. கண்ணன் நிரை மேய்த்தபோது அவற்றைக் கூட்டுவதற்காக ஊதும் வேய்ங்குழலோசை கேட்டுப் பட்டமரங்களும் தழைத்துப் பச்சென்றிருந்தன எனப் பாகவதத்திற் கூறப்பட்டது குறித்து "பண்டு தழைத்த பசுந்தழையோ கொண்ட சிறகு" என்றார். தெல்லிலங்கையை வீடணன் போய் அரசாளப் புகுந்தபோது புதுக்கிப் பசிய புதுத்தோரணங்கள் கட்டினான் என்று இராமாயணத்திற் கூறுவதைக் கருதி "புதுத்தோரணமோ" என்றார். இவைகள் சிறப்புற்ற பொருள்கள் ஆதலால் உவமைகளாக எடுத்துக் காட்டப்பட்டன. 59-62 : நல்வாய் மழலை மொழிதான் ..............பொன் ஒத்தாய் (சொ - ள்.) நின்னது நல்ல வாயின் மழலைச்சொல்லானது நீலமணிபோன்ற நிறமுள்ள கண்ணன் சிவந்த கையில் வைத்திருக்கும் வேய்ங்குழலின் இசையோ? சொல்வாய் அழகிய கிளிப்பிள்ளையே! தெளிந்த அமுதம் போன்ற கிள்ளையே ! நறுங்கூட்டுப் பொருள்களுடன் குளிக்கின்ற பிள்ளையே! இன்பச் சுவைக்குரிய குஞ்சே! காற்று என்ற பிள்ளையைத் தாய்போல எடுத்துச்சஞ்சரிக்கின்ற செல்வ நிறைவுடையாய்! நப்பின்னையாகிய தாயின் முன் கையில் தங்கும் பெண்ணாகிய தத்தையே ! பொன்னை நிகர்த்த அழகுடையாய் ! (வி - ம்.) கண்ணன் குழலிசையை யாவரும் விரும்புவது போலக் கிளியின் மழலை மொழியைக் கேட்க எவரும் விரும்புவதால் "குழலினிசைதானோ கூறாய்" என்றார். கிளிப்பிள்ளையைக் கூட்டிலிருந்து எடுத்து நறுநாற்றமுள்ள பொருள்களை | | |
|
|