அருந்தி உருவம் உறுதியுடையதாகிச் செய்யுந்தொழில்கள் மாறுபட்டு மண்ணைக் குழைத்திட்ட பொட்டணிந்து உண்ணும் உணவுகளெல்லாம் உண்டு வெண்ணெயுடன் தாய் தந்த பால் போதாமல் துன்பமடைந்து வெளியில் நின்று பரவிய தவத்தை நீங்கிய ஒழுக்கம் கொண்டு தவழ்ந்து விளையாடும் பிள்ளைத் தன்மையென வெளிப்பொருள் ஒன்று தோன்றுதல் காண்க. இப்பொருட்கு, வன்காயம் - வலிய பெருங்காயம் முதலிய மருந்துகள். சேநெய் பிள்ளைகட்கு முதலிற் கொடுப்பது ; அது விளக்கெண்ணெய் பால் முதலியன கலந்தது. உரு - வடிவம். திரன் - உறுதி. நிலக்காப்பு - மண்ணைக் குழைத்துத் திலகம் இடுவது. இது கண்ணேறு படாமல் வளர்வது குறித்திடுவது. பூதம்+அனை=பூதனை என மகரங்கெட்டு அகரங் குறைந்து நின்றதாகக் கொள்க. பூதம் - தோற்றமாகிய; அனை - தாய். வேதனை - துன்பம்; பா - பரவிய ; தவத்தை - நற்பண்புகளை; தள்ளும் - நீங்கிய ; நடை - ஒழுக்கம் ; இட்டு - கொண்டு என இவ்வகையாகச் சொற்பிரித்துப் பொருள் காண்க. 71-74 : ஒள் இழையார் கொல்லைப் .........வீட்டினான் (சொ - ள்.) மங்கையர்கள், கொல்லையில் வளர்ந்த பனைமரத்தைக் குதிரையாக்கி மடலேறுவதற்குத் தக்க அழகு வாய்ந்த சிறந்த புயங்களையுடையவன் ; கருங்கல்லை முன் அகலிகை என்ற பெண்ணாக்கிய மலர்போன்ற பாதங்களை யுடையவன் ; சொல்லிய கவியின் பொருட்டுப் பாம்பாகிய பாய்ச்சுருட்டுப் பாரத்தைத் தாங்கிய முதுகையுடையவன்; வானவர்கள் பொருட்டு அருமையான அமுதங்கடைந்த அழகிய கைகளையுடையவன்; சீதையாகிய பெண்ணுடன் கொடிய கானகத்தைக் கடந்து சென்ற வருத்தமுடையவன் ; ஒரு வேடனுக்கு மெல்லிய தன் கால் நகங்களைத் தந்த விடுதலை யுடையவன். (வி - ம்.) ஒள் இழையார் - ஒளிபொருந்திய நகையைப் புனைந்தவர் (மங்கையர்), கொல்லை - புறக்கடை ; தோட்டமும் ஆம். பெண்ணை - பனை. பனைமடலைக் குதிரையாக்கி ஊர்ந்து வருவதற்கு ஏதுவாகிய திருப்புயம் என்க. திருப்புயத்தின் அழகு கண்ட மங்கையர் அனைவரும் மடலேறியேனும் அவனை யணையவேண்டும் என்று கருதுவர் என்பது கருத்து. திருமால் அயோத்தியில் இராமனாகப் பிறந்து வளர்ந்து கோசிகமுனிவருடன் மிதிலைக்குச் செல்லும்போது வழியிற் கருங்கல்லாய்க் | | |
|
|