"நாலாயிர திவ்விய பிரபந்தம்" என்பது வைணவசமயத்தார்க்கு வேதம் போன்றது. அதனைப் பாடியவர் ஆழ்வார் பதினொருவர் ஆவர். பேய், பூதம், பொய்கை, தொண்டரடிப் பொடி, மழிசை, பாண், மங்கை, வில்லிபுத்தூர், ஆண்டாள், குலசேகரன், மாரன் என்பன பெயர்கள். 87-90 : பாதம் எனும் செந்தாமரை ..............உணர்வித்தோன் (சொ - ள்.) திருவடிகள் என்ற செந் தாமரைப் பூவிலிருந்து தேன் வடிவதுபோல் முற்காலத்தில் கங்கைநதி வழியும்படி செய்த வன்மையுடையவன் ; எப்பொழுதும் பெரிய இவ்வுலகமானது அறிவுள்ளதும் அறிவில்லாததும் ஆகத் தோன்றும்படி உறங்கியும் உறங்காமலும் அறிதுயில் கொண்டிருப்பவன் ; தன்னை வளர்த்த தாயாகிய யசோதைக்கு அழகிய வாயைத் திறந்து தெளிவாகக் காட்டி உலகம் புறத்திலிருப்பதுபோலவே தன் வாய்க்குள்ளும் இருக்கிறது என்பதை யறியும்படி செய்தோன். (வி - ம்.) வாமன வடிவமாக மாவலிபாற் சென்று மூன்றடி மண் வேண்டிப் பெற்றுப் பூமியை இடக்காலால் ஓரடியாக அளந்து, வலக்காலைத் தூக்கி வானத்தை மற்றோரடியாக அளந்து நீண்ட உருவமாக நின்றபோது திருமாலின் வலக்கால் வழியே கங்கையாறு வழிந்திறங்கியது என்பது வரலாறு. மந்தாகினி - கங்கை. கங்கையை உலகத்திற்குக் கொடுத்தல் பெருங் கொடையாதலால் அச்செயலுடையவனை "வண்மையான்" என்றார். உலகத்திலுள்ள மக்கள் உண்மையை யறியாமல் மயங்குவதற்கு அறிதுயில்தான் காரணம் என்பார் "அறியும் அறியாமையுமாய்த் தோன்ற.....துயில் கொள்வோன்" என்றார். "கண்ணன் ஆயர்பாடியில் பிள்ளையாக வளரும்போது மண்ணைத் தோண்டி யுண்ணக்கண்ட தாய் அசோதை அடித்து 'வாயைத் திறந்து காட்டு' என்றபோது, திறந்த வாயில் உலகம் முழுவதும் தோன்றக் கண்டு வியந்தாள் என்பது வரலாறு. இது குறித்து, "செகம் புறமும் உள்ளும் ....... உணர்வித்தோன்" என்றார். பெற்றவள் தேவகியாயினும் பிறரால் அறியாமல், ஈன்றவள் அசோதைதான் எனப் பிறர் அறியும்படி வளர்ந்ததால் ஈன்ற தாய் என்றார் அசோதையை. மணி - அழகு. 90-93 : கொள்ளை கவற்சிதரு..........மணிநிறமும் ஆனோன் (சொ - ள்.) மிகுதியான கவலையைத் தரும் பிறவியாகிய கடலிற் கலந்திருக்கும் அஞ்ஞானம் என்ற | | |
|
|