பக்கம் எண் :

விளக்க உரை89


'வைகானதம் பாஞ்சராத்திரம்' என்ற உபநிடதங்களை மணிகளாகவும், வடகலையும்
தென்கலையும் மணிகள் கட்டிய கயிறாகவும் உருவகஞ் செய்யப்பட்டுள்ளது.
அழகர் இரண்டற்ற ஒரு பொருள். அதனால், அத்துவிதானந்தத்தை அவரது
யானையாகக் கூறினர். திருமகள் என்பதும், வைணவமதம் என்பதும், வைகானதம்,
பாஞ்சராத்திரம் என்ற ஆகமங்களும், வடகலை தென்கலை என்ற பிரிவுகளும்
அப்பொருளில் அடங்கும் என்பது கருத்து.
 
பரி

116-119 : தானந்த வர்க்கத்துடன் ...............வேதப்புரவியான்

   (சொ - ள்.) அழகான சேணம் கடிவாளம் என்பவை பூண்டு எழுந்து வாயால்
நுரைகளைக் கக்கி்க் குதிரை என்ற வடிவத்தின் நலத்தை எல்லார்க்கும் காட்டிப்
போர்க்களத்தில் எதிர்த்தவர் வானுலகஞ் செல்ல வழிகாட்டி, எங்கும்
தூசிகளையுண்டாக்கிப் பல மான்களையும் ஓட்டத்தில் வென்று விரைந்து சென்று,
நான்கு கால்கள், வால், வாய் என்ற ஆறு உறுப்புக்களையும் போர் செய்யும்
உறுப்புக்களாகக் கொண்டு முன்னணியிற் போற்றப்படுகின்ற குதிரை எனவும், அந்த
எழுத்தின் இனத்தோடு கூடி ஒலியெழ மனிதர் வாய்ச்சொல்லைக் கடந்து கோயிலின்
அமைப்பின் அழகைக் காட்டி முத்தியுலகம் செல்வதற்கு வழி காட்டி அடையும்
உயிர்களையும் காட்டிப் பெருமை தரும் பல நூல்களையும் தோற்றுவித்து ஆறு
அங்கங்களையும் தன் அங்கமாகக் கொண்டு உலகத்தில் எவராலும் போற்றப்படுகின்ற
வேதம் எனவும் இருபொருள் கொள்க. குதிரைக்கும் வேதத்திற்கும் சிலேடை இது.
வேதமாகிய குதிரையையுடையவன் என்க.

   (வி - ம்.) குதிரைக்குரிய பண்புகள் வேதத்திற்கும் உள்ளன எனச் சொல்லால்
ஒப்புமை காட்டினர். ஆறு அங்கங்கள் ஆவன : சிட்சை, கற்பம், வியாகரணம்,
நிருத்தம், சந்தோபிசிதம், சோதிடம் என்பவை. வர்க்கம் - இனம். வாயின் + நுரை
வாயின் + உரை எனப் பிரிக்க. கற்கி - குதிரை ; கோயில். சொர்க்கம் - வானம் ;
முத்தி. அணு - தூசி ; உயிர். கலை - மான் ; நூல். தாரணி - பூமி ; தார் + அணி =
முன்னணிப்படை என்று இரு பொருள் கொள்க.