வெண்பா முதலிய நான்கு பாக்களையும் வயல்வரம்பாகவும்,
அப்பாவினினங்களை மடைப்போக்காகவும், மன முதலிய நாற்கரணங்களையும்
ஏராகவும், புலவர்களை உழவராகவும், நான்கு நெறிகளை விதையாகவும்,
அறமுதலிய நாற்பொருள்களை விளைபயனாகவும், கல்லாத புல்லர்களைத்
தமிழ்ப் பயிர் வளர்வதைத் தடுத்து நிறுத்தும் களைகளாகவும், பிள்ளைப்
பாண்டியன், வில்லி, ஒட்டக் கூத்தனிவர்களை அக்களைகளையும்
செயலாளர்களாகவும் உருவகப்படுத்தித் தமிழ் பயிர் தமிழ்நாட்டில் வளர்த்த
முறையைத் தோற்றுவித்த புதுமையை எங்ஙனம் புகழ்வது (63 - 68)! பாடலிற்
பொருட்சுவை காணும் வகைக்குப் பாலும், முந்திரிகையும், வாழைக் கனியும்,
கரும்பும், நாளிகேரமும் உவமையாக வகுத்துக் காட்டிய காட்சி
வடமொழியையொட்டியதுபோலும். இவ்வாறு சிறப்பித்து முத்திக் கனியே,
யென் முத்தமிழே, புத்திக்கு ளுண்ணப் படுந்தேனே என்று விளிப்பது
கற்றோர் மனத்தை யுருக்குஞ் சொற்றொடராம் (69-70).
தமிழ்
எல்லாப் பொருளினும் உயர்வுடையது
|
விண்ணப்ப முண்டு விளம்பக்கேள் என்று கூறத் தொடங்கியவர்
பின்னும் தமிழார்வத்தாற் புகழ்ச்சி இகழ்ச்சி போலத் தோன்றுமாறு பலபடப்
புனைகின்றார். சிந்தாமணி நீ உன்னைச் சிந்து என்று சொல்வது தகாது என்ற
கருத்தை நொண்டிச்சிந்து, காவடிச்சிந்து எனப் பெயர் பெற்ற பாடல்களைக்
குறிப்பதுபோலும். உயர்ந்த பொருள்களினும் தமிழ் உயர்வுடைய பொருள்
என்பதைப் புலப்படுத்த, மூவர் தேவரும் முக்குணமேயுடையவர் நீயோ
பத்துக்குணமுடையை; ஐந்து வண்ணங்களே எப்பொருளிடத்தும்
அமைந்துள்ளவை; நின்பால் நூறுவண்ணங்கள் அமைந்துள்ளன.
ஆறுசுவைதாம் நாவிலறியப்படுவன. செவியாலறியப்படும்
|
|
|
|