பக்கம் எண் :

முன்னுரை11


ஒன்பான் சுவையும் நின்பாலுள்ளன. ஒன்றே வனப்புள்ளது எப்பொருளிடத்தும்;
எட்டுவனப்பு நின் பாலியைந்துள்ளன. அரசர்கள் பொருள்கோள் வகை
மூன்றே. நீ எட்டுவகைப் பொருள்கோள் இயைய விளங்குகின்றாய்; ஆண்பால்,
பெண்பால், அலிப்பால் என மூன்றே உலகிலுள்ளன; நீயோ முப்பாலும் அன்றி
ஐம்பாலும் பெற்றுள்ளாய்; சீர் முப்பதும் பெற்றனை எனச் சிறப்பித்துப்
பாராட்டிய செயல் புலமைத் திறத்தைப் புலப்படுத்துகின்றன (73 - 78). தளை,
வெண்பா, கலிப்பா, மருட்பா, விருத்தம் என்ற சொற்களுக்கு வேறு பொருள்
தோன்றப் பொருத்தமற்றவை யெனப் பொருத்திக் காட்டிய நுண்ணறிவினை
நோக்குக (79 - 83). மண்ணிற் புகழ் வடிவமாக மக்கள் வாழ்வதற்கும்
விண்ணில் தேவராக மேவுதற்கும் தமிழ்மொழியே துணையாம்; தமிழுணரா
மாந்தர் யமனுலகமே சேர்வர் எனச் சாற்றியது மொழிப் பற்றின்
முதன்மையுடையவர் என்பதை நன்குவிளக்கும் (89 - 90). ஈசருயர்ந்தாரோ
உன் சங்கத்தால், நீ யுயர்ந்தாயோ அவர் சார்ந்ததனால், வாணி அங்கைமேல்
நீ யமர்ந்தாயோ, உன்மேலவள் அமர்ந்தனளோ, நீ திருமாலைத்
தொடர்ந்தாயோ, அவர் உன்னைத் தொடர்ந்தாரோ, முருகர் சொன்னாரோ,
உன்னை; நீ சொற்றனையோ அவர்க்கு மதுரைவாச ருனக்குப் பொருளாய்
வந்தாரோ, அவர்க்குப் பொருளாய் நீ வந்தாயோ என்று ஐயமுற
வமைத்தவையெல்லாம் தெய்வம் நீயேயெனத் தமிழுக்குத் தலைமை
தோற்றுவித்தன (91 - 95).

பெண் பெருமை

     திருவாரூர்த் தியாகப்பெருமானைத் தூது போக்கிய பெருமையுடைய
நின்னைத் தூதுக்குச் செல் என்று கூறுவது எத்துணைப் பேதைமை!
வருத்தத்தாற் கூறியதாக மதிப்பாய். பெண்மதியென் றெண்ணாதே என்று
தலைவி கூறுவதாக அமைத்திருப்பது உலகியல்புணர்ந்தவர் என்பதை
உணர்த்து