கின்றது. பெண்களெல்லாம்
வாழ நீ பிறந்தாய் என்பதறிந்தே நின்பாற்
கூறுகின்றேன் என்று தமிழ்ப் பெண்கட்குதவியாய் நின்ற செயல்களை
யெடுத்துக் காட்டிப் பெண்ணுலகிற்குப் பெருமையளித்ததும் காண்க (101 - 106).
அன்னம், வண்டு, மான், கோகிலம், மனம் ஆகிய தூதுக்குரிய
பொருள்களைக் கூறி அவைகள் சொக்கநாதர் பாற்சென்று தூது சொல்லா
எனக் காரணங்காட்டி மறுத்துரைக்கின்றார் (107 - 111). கொங்குதேர் என்று
பாடியதும் நக்கீரருடன் வசைபாடிச் சொற்போர் விளைத்ததும், பாணனுக்குச்
சீட்டுக்கவி யளித்ததும், அகப்பொருள் பாடியதும், வட மதுரைக்கு வந்ததும்,
காரியார் நாரியார்க்குக் காட்டுள் வந்ததும், பாணபத்திரன் பொருட்டு விறகு
சுமந்ததும், பலகை தந்ததும், இசைவாது வென்றதும் ஆகிய சிவபெருமான்
செயல்களையெல்லாம் தமிழின் செயலாகக் காட்டிச் சொக்கர்
உனக்குள்ளன்றோ என்று ஒன்று படுத்திய சித்திரம் எண்ணி எண்ணி
வியக்கற்பால தொன்றாம்.
பூசைப்
பொருள்களாகச் சிறந்தவை
|
பூசலார் சமைத்த கோயில், கண்ணப்பர் உமிழ்ந்த
திருமஞ்சனம்,
திருக்குறிப்புத்தொண்டர் அளித்த பரிவட்டம், மானக்கஞ்சாறனார் சாத்திய
பஞ்சவடி, மூர்த்தியார் சேர்த்த குருதிச் சந்தனம், மாறனார் படைத்த
விருந்தமுது, சிறுத்தொண்டர் இட்ட பிள்ளைக்கறி, தாயனார் தந்த மாவடு,
கணம்புல்லர் ஏற்றிய திருவிளக்கு இவை போன்ற பூசைக்குரிய அருமைப்
பொருள்கள் படைத்துப் பூசை செய்ய யாரால் இயலும்? ஆரூரர்க்காதியிலே
பாட்டே யர்ச்சனைக்காகு மென்றார். ஆதலால் நீ அவர் சொற்படி செய்தாய்.
நீ வைதாலும் அவர்க்கு வாழ்த்தாகவே செவியிலேறும் என்பது மெய்தான்
|
|
|
|