எனக் கண்டேன் என்று
தமிழை வியந்து கூறும் பகுதியும் (140 - 150) பாவலர்
மனத்தைக் கவர்வதாம். இருந்தமிழே யுன்னாலிருந்தே னிமையோர்
விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன் (151) என்ற அடிகள் படித்துப் படித்து
இன்புறும் பண்பு வாய்ந்தன.
காதல்
நோய் கொண்டாள் கூற்று
|
ஆனை தின்ற விளங்கனியானேன், கல்லானை தின்ற கரும்பானேன்,
தேம்பினேன்; பனியால் வாடிய செந்தாமரை யொத்தேன், வெள்ளக்
கொள்ளை கடந்தாய் நீ, மால் வெள்ளங்கடத்தி விட வேண்டாவோ!
சாக்கியரைக் கழுவேறச் செய்தாய், வேளையது செய்யாயோ! பாண்டியன்
கூனொழித்தாய் நீ, மதன் கரும்பின் கூனொழியச் செய்யாயோ! வெப்பு நோய்
தீர்த்தாய், என் காமவெப்பு நோய் தீர்க்க விரும்பாயோ! நஞ்சினை
யமுதாக்கினை, இன்று சமைத்த உணவாகிய நஞ்சினை யமுதாக்காயோ!
தீக்குள் வேவாதிருந்த நீ, காமத்தீ என்னைச் சுடாதிருக்கச் செய்யாயோ!
கொங்கிற் பனியால் அடியார் வாடாது செய்த நீ, நான் பனியால் வாடாதிருக்க
மனமிரங்காயோ! கடல் கொல்லாதபடி அப்பரைக் கல்லின்மேல் மிதக்க
விட்டாய், என்னைக் கடல் கொல்லாம லதனோடுற வாக்காயோ! ஆண்
பனையைப் பெண் பனையாக்கினை, அன்றிற் பறவையை வேறொரு
புள்ளாக்காயோ! தென்றலுனக் குறவாயதுபோல எனக்கும் உறவாக்காயோ!
பாடும் பண்ணெல்லாம் உன் பாவையாகக் கொண்டாய், அப்பண்கள்
என்னைச் சினவாதிருக்குமாறு கூறாயோ! முத்துப்பந்தர் முதலியவை
கொண்டாய், அம்முத்துச் சுடாதிருக்கச் செய்யாயோ! அங்கத்தைப் பூம்பாவை
யாக்கினாய், என் அங்கத்தையும் அவ்வாறு செய்யாயோ! முதலை வாய்ப்
பிள்ளையை வருவித்தாய், என் உயிரையும் வருவிக்கவல்லை நீ என்று காதல்
கொண்ட தலைவி தமிழின்பாற் கூறுங் கூற்றுக்கள் கன்மனத்தையும்
கரைப்பனவாம். இப்பகுதியில் - வேள், அவன்
|
|
|
|