பக்கம் எண் :

முன்னுரை14


கரும்புச் சிலை, காம வெப்பம், உணவை வெறுத்தல், காமத்தீச் சுடுதல்,
பனியால் வாடுதல், கடல் பகையாயொலித்தல், அன்றில் பனை மேலிருந்து
அரற்றல், தென்றல் பகையாய் வந்து மோதுதல், பண்கள் பகையாதல்,
முத்துக்கள் உடலிற் பட்டுச் சுட்டு வருத்துதல், அங்க மெலிந்து என்பாதல்
ஆகிய காமவிகாரங் கொண்ட காரிகையார் செயலும் விளங்குவது காண்க
(155 - 167).

வழி கூறுவது

     திருஞான சம்பந்தர் முதலிய மூவரும் காரைக்காலம்மையாரும்
வெள்ளானைமேற் கொண்ட வித்தகரும் கழறிற்றறிவாரும் நீயே யாதலால்
“உன்கையி லாகாத தொன்றுண்டோ” (170 - 177) என்றும் உரைக்கின்றார்.
பின்பு மதுரைக்குச் செல்லும் வழி கூறுவதுபோலக் கூறி எவ்வழிச் சென்றாலும்
காரியஞ் சித்திக்குமே, நான் சொல்லுவதென்? என்று கூறாது விடுக்கின்றார்.
கல்லாத மூடர்பாற் றங்காது நல்லார்பாற்றங்கி மதுரை சேர்க. வான்மேலுயர்ந்த
மதில் கடந்து திருவீதி சூழ்வந்து திருக்கோயிலுட் புகுந்து தென்பானின்று
வணங்கி அபிடேக முனியமைத்த தளவிசையும் மண்டபமும் கோபுரமுங்
கண்டு களிகூர்ந்து திருவோலக்கங் காண்க எனச் செப்புகின்றார்.

வணங்கு முறை

     பின்னர்த் தேவரு முனிவரும் யாவரும் புடை சூழ நின்று பணியும்
திருமுன் பொருக்கெனப் போய்ப் புகுந்து திருவடி முதல் மணிமுடிவரை
உற்று நோக்கித் திருத்தாளை முடிமேற் சூடித் தீபமெதிராகச் சேவிக்குங்
காலத்துப் பல தேவருடனே கூடித் துதித்து நில். முக்கட்கனியே! முழுமுதலே!
துரையே! செல்வமே! கோமானே! என்றெல்லாம் புகழ்ந்து பொன்னனையாள்
வீட்டிற் புகுந்திருந்தவர்க்கு என் பொன்னனையாள் வீட்டிற் புகுதல் ஏன்
பொருந்தாது என்று திருச்செவியிலேறும்படி யுரைத்துத் தூது சொல்லி வா
வென்று முடிக்கின்றார்.