இவ்வரிய நூலுள் மதுரையில் நடந்த திருவிளையாடற் செய்தி
பல
அமைந்துள்ளன; இடையிடையே சிலேடை, மடக்கு என்ற சொல்லணிகளும்
உவமையுருவகம் முதலிய பொருளணிகளும் பொதிந்து நிற்பன காணலாம்.
திருக்குறட் கருத்துக்கள் பல செறிந்து காணப்படுகின்றன. திருக்குறட்
பாவினையே யமைத்த கண்ணியும் சில உள்ளன. செந்தமிழின் சிறப்பை
எடுத்துக் கூறிய நூல்களில் இத்தமிழ் விடுதூது போல் ஒன்றும் இல்லை.
தமிழ்ப் பெருமையும் சைவ சமயத்தின் அருமையும் தமிழுக்கும்
சைவத்துக்குமுள்ள தொடர்பும், செந்தமிழ் அருமை தெரியச் சிவபெருமான்
புரிந்த திருவிளையாடல்களும் இன்னோரன்ன பிறவும் இந்நூலால் இனிது
விளங்குகின்றன.
தி.
சங்குப்புலவர்
சென்னை
31.10.64
|
|
|
|