பக்கம் எண் :

தமிழ்விடுதூது17


10. பாத்திரங்கொண் டேபதிபாற் பாய்பசு வைப்பன்னிரண்டு
சூத்திரங்கொண் டேபிணித்த தூயோரும் - நேத்திரமாம்
 
11. தீதில் கவிதைத் திருமா ளிகைத்தேவர்
ஆதி முனிவ ரனைவோருஞ் - சாதியுறும்
 
12. தந்திரத்தி னாலொழியாச் சார்வினையைச் சாற்றுதிரு
மந்திரத்தி னாலொழித்த வல்லோரும் - செந்தமிழிற்
 
13. பொய்யடிமை யில்லாப் புலவரென்று நாவலர்சொல்
மெய்யடிமைச் சங்கத்து மேலோரும் - ஐயடிகள்
 
14. காடவருஞ் செஞ்சொற் கழறிற் றறிவாரும்
பாடவருந் தெய்வமொழிப் பாவலரும் - நாவருங்
 
15. கல்லாதார் சிங்கமெனக் கல்விகேள் விக்குரியர்
எல்லாரு நீயா யிருந்தமையாற் - சொல்லாரும்
 
16. என்னடிக ளேயுனைக்கண் டேத்தினிடர் தீருமென்றுன்
பொன்னடிக ளேபுகலாப் போற்றினேன் - பன்னியமென்
 
17. பஞ்சிபடா நூலே பலர்நெருடாப் பாவேகீண்
டெஞ்சியழுக் கேறா வியற்கலையே - விஞ்சுநிறந்
 
18. தோயாத செந்தமிழே சொல்லே ருழவரகந்
தீயாது சொல்விளையுஞ் செய்யுளே - வீயா
 
19. தொருகுலத்தும் வாரா துயிர்க்குயிராய் நின்றாய்
வருகுலமோ ரைந்தாயும் வந்தாய் - இருநிலத்துப்
 

20.

புண்ணியஞ்சே ருந்திப் புலத்தே வளிதரித்துக்
கண்ணிய வாக்காங் கருப்பமாய் - நண்ணித்
 
21. தலைமிடறு மூக்குரத்திற் சார்ந்திதழ்நாத் தந்தம்
உலைவிலா வண்ணத் துருவாய்த் - தலைதிரும்பி
 
22. ஏற்பமுதன் முப்பதெழுத் தாய்ச்சார் பிருநூற்று
நாற்ப தெழுத்தா நனிபிறந்தாய் - மேற்படவே