23.
|
எண்முதலா
கப்பகரு மீரா றெனும்பருவம்
மண்முதலோர் செய்து வளர்க்குநாட் - கண்மணியோற் |
|
|
24. |
பள்ளிக்கூ
டத்தசையாம் பற்பலதொட் டிற்கிடத்தித்
தள்ளிச் சிறார்கூடித் தாலாட்டி - உள்ளிலகு |
|
|
25. |
மஞ்சட்
குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும்
மிஞ்சப் புகட்ட மிகவளர்ந்தாய் - மஞ்சரையே |
|
|
26. |
பன்னியொரு
பத்துப் பருவமிட்டு நீவளர்த்தாய்
உன்னை வளர்த்துவிட வொண்ணுமோ - முன்னே |
|
|
27. |
நினையும்
படிப்பெல்லா நின்னைப் படிப்பார்
உனையும் படிப்பிப்பா ருண்டோ - புனைதருநற் |
|
|
28. |
செய்யுட்சொன்
னான்குமுயர் செந்தமிழ்ச்சொல் லோர்நான்கும்
மெய்யுட் பொருளேழ் விதத்திணையும் - மையிலெழுத் |
|
|
29. |
தாதியாப்
பெட்டு மலங்கார மேழைந்தும்
பேதியாப் பேலெழின்மாப் பிள்ளையாய்ச் - சாதியிலே |
|
|
30. |
ஆங்கமைசெப்
பற்பண் ணகவற்பண் டுள்ளற்பண்
தூங்கற்பண் பட்டத்துத் தோகையரா - ஓங்குமனத் |
|
|
31. |
தெண்கருவி
யைந்தீன் றிடுநூற்று மூன்றான
பண்களும்பின் கல்யாணப் பாவையரா - யெண்கொளும் |
|
|
32. |
நற்றா
ரகமா நவரசமாம் பிள்ளைகளைப்
பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே - உற்றகலாப் |
|
|
33. |
பண்கள்முதற்
பெண்களொடும் பாலரொடு நாடகமாம்
பெண்கொலுவில் வீற்றிருக்கப் பெற்றாயே - மண்புகழத் |
|
|
34. |
தாழ்விலா
வட்டா தசவன் னனைகளெனும்
வாழ்வெலாங் கண்டு மகிழ்ந்தாயே - ஆழ |
|
|
35. |
நெடுங்கோல
வையையிலென் னேசர்மேற் பட்ட
கொடுங்கோல்செங் கோலாகக் கொண்டாய் - அடங்காத |