|  
              
              36. 
           | 
          எங்கோவே 
            பத்தென் றியம்புதிசைக் குள்ளேநின் 
            செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கேயுன் | 
        
         
           | 
            | 
        
         
          | 37. | 
          தேசமைம்பத் 
            தாறிற் றிசைச்சொற் பதினேழும் 
            மாசறநீ வைத்தகுறு மன்னியரோ - வீசு | 
        
         
           | 
            | 
        
         
          | 38. | 
          குடகடலுங் 
            கீழ்கடலுங் கோக்குமரி யாறும் 
            வடவரையு மெல்லை வகுத்தாய் - இடையிருந்த | 
        
         
           | 
            | 
        
         
          | 39. | 
          முன்னுறுந்தென் 
            பாண்டி முதற்புனனா டீறான 
            பன்னிரண்டு நாடுமப் பானாடோ - அந்நாட்டுள் | 
        
         
           | 
            | 
        
         
          | 40. | 
          வையை 
            கருவைமரு தாறுமரு வூர்நடுவே 
            ஐயநீ வாழு மரண்மனையோ - செய்யபுகழ் | 
        
         
           | 
            | 
        
         
          | 41. | 
          மூவேந்தர் 
            வாகனமா மூவுலகும் போய்வளைந்த 
            பாவேந்தே நீபெரிய பார்வேந்தோ - காவேந்து | 
        
         
           | 
            | 
        
         
          | 42. | 
          விண்ணவருங் 
            காணரிய வேதா கமங்களெலாம் 
            புண்ணியனே புன்றன் புரோகிதரோ - எண்ணரிய | 
        
         
           | 
            | 
        
         
          | 43. | 
          நல்லபெருங் 
            காப்பியங்க ணாடகா லங்காரஞ் 
            சொல்லரசே யுன்னுடைய தோழரோ - தொல்லுலகிற் | 
        
         
           | 
            | 
        
         
          | 44. | 
          சார்புரக்குங் 
            கோவேநற் சாத்திரங்க ளெல்லாமுன் 
            பார்புரக்குஞ் சேனா பதிகளோ - வீரரதிர் | 
        
         
           | 
            | 
        
         
          | 45. | 
          போர்ப்பா 
            ரதமும் புராணம் பதினெட்டுஞ் 
            சீர்ப்பாவே யுன்னுடைய சேனைகளோ - பார்ப்பார்கள் | 
        
         
           | 
            | 
        
         
          | 46. | 
          அக்கர 
            வர்த்தியென லாமென்பார் பூலோக 
            சக்கர வர்த்தியுநீ தானன்றோ - சக்கரமுன் | 
        
         
           | 
            | 
        
         
          | 47. | 
          பேந்தி 
            நெடுந்தேர்மே லேறிச் சுழிகுளம் 
            நீந்தியோர் கூட நிறைசதுக்கம் - போந்து | 
        
         
           | 
            | 
        
         
          | 48. | 
          மதுரங் 
            கமழ்மாலை மாற்றணிந்து சூழும் 
            சதுரங்க சேனை தயங்கச் - சதுராய் |