தமிழ்மொழியின்
சொல்லருமை பொருளருமை யுணர்வதற்குச்
சிற்றிலக்கிய நூல்களும் வேண்டுவனவாம். ஆதலால் அரசியலாரும் புலவர்
வகுப்பு, வித்துவான் வகுப்பு மாணவர்கட்குப் பாடமாகச் சிற்றிலக்கியங்களையும்
வகுத்து வைப்பது நாம் கண்ட உண்மையாம். தூது என்பதும் ஒருவகை நூல்.
தூது என்பது, ஒரு தலைவனைக் கண்டு காதல்கொண்ட
மங்கையொருத்தி, தன் காதலை உயர்திணைப் பொருள்களிடத்தேனும்
அஃறிணைப் பொருள்களிடத்தேனும் எடுத்துக்கூறித் தூது செல்லுமாறு ஏவும்
பொருளமைந்தது. இயம்புகின்ற காலத் தெகினமயில் கிள்ளை, பயம்பெறுமே
கம்பூவை பாங்கி - நயந்தகுயில், பேதை நெஞ்சந் தென்றல் பிரமரமீ
ரைந்துமே, தூதுரைத்து வாங்குந் தொடை எனத் தூதுவிடுதற்குரிய
பொருள்களிற் பாங்கியாகிய உயர்திணைப் பொருள் கூறப்பட்டுளதெனினும்
பாங்கிவிடுதூது பாடினோரெ வரும் இலர். அஃறிணைப் பொருள்களைக்
கூறிவிடுத்த தூது நூல்களேயுள்ளன. இன்ன பொருள்களைத்தான் தூதுக்குரிய
பொருள்களாக எடுத்துரைக்க வேண்டும் என்ற வரையறையும் அமைத்திலர்.
புகையிலையைப் பொருளாக விடுத்த தூது நூலும் இருப்பதாகத் தெரிகிறது.
மதுரைச் சொக்கநாதர் மேற் காதல் கொண்ட தலைவியொருத்தி
தமிழைத் தூது விடுத்ததாகப் பொருளமைத்துப் பாடிய நூல் தமிழ் விடுதூது
என்பதாம். இந்நூலியற்றிய ஆசிரியர் இன்னார் எனப் பெயர்கூடப்
புலப்பட்டிலது. ஆயினும் செந்தமிழ்ப்பற்றும் தெய்வப்பற்றும் சைவப்பற்றும்
செறிந்த வுள்ளத்தவர் என்பது மட்டும் நன்கு விளங்குகின்றது.
இந்நூலினை முதலில் ஏட்டிலிருந்து அச்சிற்குக் கொண்டு
வந்த
பெருமை டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரவர்களைச் சார்ந்ததே. அச்சேறிய
காலமுதல் இதுகாறும் அவர்கள் குறிப்புரையுடன் உலவியது. புலவர் வகுப்பு,
வித்துவான்
|
|
|
|