பக்கம் எண் :

பதிப்புரை3


     வகுப்புக்கட்குப் பாடமாக அரசியலார் அமைப்பது கண்டு விளக்கவுரை
வரைந்து வெளியிடின் நற்பயன் விளையும் எனக் கருதினம். எம் கழகப்
புலமையாளராகிய சங்குப்புலவரை உரை வரைந்துதவுமாறு கூறிப் பெற்று
இந்நாளில் வெளியிடுகின்றோம்.

     இந்நூலிற் கண்ணிகளைச் சீர்பிரித்துத் திருத்தமாகப் புதுக்கியதுடன்
பொழிப்புரையும் விளக்கமும் மேற்கோளும் கதைச் சுருக்கமும்
வரையப்பட்டுள்ளன. தமிழ்ப் பற்றுடையார்க்கும் பயிலும் மாணவர்கட்கும்
இந்நூல் பெரிதும் பயன்படும் என்பது எம் கருத்து. கழக வாயிலாக இந்நாள்
வெளியேறுகின்றது புதுமையாகத் “தமிழ் விடுதூது” என்னும் இந்நூல்.

     அன்பர் பலரும் அருமை பெருமையறிந்து தமிழ் மொழியைப் போற்ற
இந்நூல் தகுதியுடையதே. மாணவர்களும் ஆசிரியர்களும் வாங்கியும்
வாங்குவித்தும் நற்பயன் பெறுக.

                           சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்