செந்தமிழ்மொழியின் கண்ணுள்ள சிற்றிலக்கிய நூல்களுள்
தூது
என்பதும் ஒன்று. இது ஒரு தலைவன்மேற் காதல் கொண்ட தலைவி தன்
காதல் நோயின் துயரத்தைக் காதலனுக்கு எடுத்துக் கூறி “லை வாங்கி வா”
“தூது சொல்லி வா” என்று உயர்திணைப் பொருள்களையேனும் அஃறிணைப்
பொருள்களையேனும் விடுத்ததாகப் பொருளமைத்துப் புலவர்களாற்
பாடப்படுவதொன்றாம். காதலனும் காதலிக்குத் தூது விடுப்பதும் உண்டு
எனினும் காதலி விடுத்த தூது நூல்களே பெரும்பாலும் காணப்படுகின்றன.
‘விறலிவிடு தூது’ என்பதே ஆடவன் விடுத்த தூது நூலாகத் தோன்றுகிறது.
அதுவும் காதற் பொருள் கூறாது புலவன் தான் பரத்தையருடன் கூடிக்
கேடடைந்த செய்தியை விறலிபாற் கூறி மனைவியின் ஊடல் நீக்குமாறு
விடுத்ததாகப் பொருளமைந்துள்ளது. இதுபோல ஆடவன் விடுத்த தூதுப்
பொருள் அமைந்த நூல் காண்பதரிது. மங்கையர் தம் காதல் கூறி விடுத்த
பொருளமைந்த நூல்களே எங்கணும் காணப்படுவனவாம்.
தூது நூல் பாடுவதற்கு இலக்கணம் ” பயிறருங் கலிவெண்
பாவினாலே,
உயர்திணைப் பொருளையு மஃறிணைப் பொருளையுஞ், சந்தியின் விடுத்தல்
முந்துறு தூதெனப், பாட்டியற் புலவர் நாட்டினர் தெளிந்தே” என்ற
(இலக்.வி.874) நூற்பாவாலும் உரையாலும் அறியலாம். உயர்திணைப்
பொருள்களிற் பாங்கி யொருத்தியே தூது பகர்தற்குத் தக்கவள்
|
|
|
|