பக்கம் எண் :

முன்னுரை5


எனக் கூறியிருப்பினும் “பாங்கிவிடு தூது” என்ற நூல் ஒன்றுங்கூடக்
காண்கிலம். அஃறிணைப் பொருள்களை விடுத்த தூது நூல்களே
மிகுந்துள்ளன. ‘இரத்தினச் சுருக்கம்’ என்ற நூலிற் காதலர்க்குத் தூது
விடுக்கும் பொருள்களாக வகுத்துரைத்த பொருள்கள் “இயம்புகின்ற காலத்
தெகினமயில் கிள்ளை, பயம்பெறுமே கம்பூவை பாங்கி - நயந்த குயில்,
பேதைநெஞ்சந் தென்றல் பிரமரமீ ரைந்துமே, தூதுரைத்து வாங்குந் தொடை”
இவை எனினும் பிற்காலத்தார் அவற்றையே தூதுக்குரிய பொருள்களாகக்
கொண்டனர் எனக் கூறுவதற்கும் இடனின்று. வனசவிடு தூது, நெல்விடு தூது,
பணவிடு தூது, மான்விடு தூது, துகில்விடு தூது போன்ற நூல்கள் பல
காண்கின்றோம். புகையிலைவிடு தூதும் அச்சிட்டு டாக்டர் உ.வே.சா.
அவர்கள் குறிப்புரை வரைந்துள்ளனர். அறிவாற்றல் சான்ற புலவர்கள் தம்
மனத்தெழுந்த ஆர்வத்தால் ஒரு தலைவனைச் சிறப்பிப்பதற்கும் தாம்
விழைந்த பொருளைப் புகழ்வதற்கும் எடுத்துக் கொண்ட இலக்கியமாகவே
தூது நூல் தோன்றுகிறது. காவியம், புராணம், கலம்பகம், அந்தாதி இவை
போன்ற இலக்கியங்களின் இடையே தூதுப் பொருளமைந்துள்ளமையும்
அறியலாம். சிந்தாமணியிற் குணமாலை என்பவள் சீவகன்பாற் கிளியைத் தூது
விடுத்த பொருளமைந்துள்ளது. பெருங்கதையிலும் வாசவதத்தை
பிரிவாற்றாமையால் வருந்தி மான் முதலிய அஃறிணைப் பொருள்களை
விளித்துத் தூது கூறி வருமாறுரைத்த பொருட் பகுதியும் உள்ளது (3.2.143 -
286) காண்க.

கலம்பகத்தில் தூது

“ஞ்சுகா ளுங்களைப்போன் மாரன்பூ மாரிபெய்ய
விஞ்சியது பேராசை வெள்ளங்காண் - டஞ்சம்
வழுத்தீர் மதிச்செங்கண் மாலலங்கா ரற்கு
வழுத்தீர் மதிச்செங்கண் மால்”