என
மேகத்தை விடுத்ததாகப் பொருளமைந்த கவி கலம்பகத்தில்
வந்தது காண்க. கலம்பக நூலின் உறுப்புக்களில் மேகவிடு தூதும் ஒன்றாகும்.
ஆதலின் தூதுப் பொருளமைந்த கவி அந்நூலிடை யமைந்தே யிருக்கும் என
அறிக.
தேவாரம், திருவாய்மொழி, திருவாசகம் போன்ற துதிப்
பாடல்களினும்
சிற்றின்பப் பகுதியமைந்து தூது விடுக்கும் பொருளும் அமைந்துள்ளமை
யறியலாம். வண்டரங்கப் புனற்பொன்னி மதுமாந்திப் பெடையினொடும்,
ஒண்டரங்க விசைபாடு மளியரசே யொளிர் திங்கட், டுண்டரங்கப் பூண்மார்பர்,
திருத்தோணி புரத்துறையும், பண்டரங்கர்க் கென்னிலைமை பரிந்தொருகாற்
பகராயே என வண்டினை நோக்கிக் கூறிய பொருளமைந்த பாடல் காண்க.
இது போன்ற பல பாடல்கள் உள்ளன. அவற்றுள், தூது அகப் பொருட்
பகுதியன்று. புறத் திணைத்துறையாம். தெய்வத்தைப் பாட்டுடைத்
தலைவனாகக் கொண்ட நூல், கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த
பக்கத்தின் பாற்படும். மக்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்ட நூல்,
மானிடர் மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கத்தின் பாற்படும்.
மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடுதூது என்பது மதுரையிற்
கோயில்
கொண்டு வீற்றிருக்கும் சொக்கநாதர் என்ற தெய்வத்தின் மேற் காதல்
கொண்ட காரிகையொருத்தி, தன் காதல்நோயைக் கூறிவருமாறு
தமிழ்மொழியைத் தூது விடுத்த பொருளமைந்தது. ஆசிரியர் பெயர் காலம்
அறியப்படா நூல் இது. நூலின் சொற்சுவையும் பொருட்சுவையும் ஆசிரியர்
புலமைத் திறத்தை விளக்குகின்றன. இந்நூலின் அமைப்பை
|
|
|
|