ஆய்ந்தால் செந்தமிழ்ப்பற்றுடையவர்;
பரந்த தமிழ்நூற் பயிற்சியும் கேள்வியும்
உடையவர்; சிவபெருமானிடத்தும் அவனடியாரிடத்தும் பேரன்பு வாய்ந்தவர்;
திருவிளையாடல்களில் ஈடுபட்டுச் சிந்தையுருகி நின்றவர்; சைவப் பற்றே
தனிப்பற்றெனக் கொண்டவர்; வடமொழி நூல்களும் பயின்றவர். தாமின்
புறுவ துலகின் புறக்கண்டு, காமுறுவர் கற்றறிந் தார் என்ற
குறட்பொருட்கேற்ப வாழ்வு நடத்தியவர் என அவர் பண்புஞ் செயலும்
புலப்படும். சைவப் பற்றும் தமிழ்ப் பற்றுமே இந்நூல் பாடுவதற்குக்
காரணமாய் உள்ளத்துள் நின்றனவெனக் கொள்ளலாம். இந் நூலாசிரியர்,
சொக்கநாதர்பாற் காதல் கொண்ட தலைவியாகவும், தமிழ்மொழிப் பாங்கியின்
தலைவியாகவும் காட்சியளிக்கின்றார். ஆசிரியர் தலைவியாகவே அமைந்து
கூறுமாறு காண்க.
தமிழே
தேவர், மூவர், பாவலர் என்பது
|
இந்நூலின் முதல் நான்கு கண்ணிகளில் சோமசுந்தரர்,
தடாதகைப்
பிராட்டியார், கணபதி, முருகவேள் ஆகிய நால்வரையும், அவர்க்குப்பின்
அகத்தியர் தொல்காப்பியர் முதலிய தமிழ்நூல் இயற்றிய பாவலர் பலரையும்
(9 - 15) எடுத்துரைத்து எல்லாரும் நீயா யிருந்தமையால் எனத்
தமிழ்வடிவமாகவே சுந்தரர் முதலிய தேவரும் முனிவரும் பாவலரும்
இருக்கின்றார் எனக் காட்டுகின்றார். பின் என்னடிகளே என்று தமிழை
விளித்து முன்னிலைப்படுத்துகின்றார். நூலே! பாவே! கலையே! செந்தமிழே!
செய்யுளே! என்று போற்றுகின்றார் (17 - 18)
தமிழின்
பிறப்பும் வளர்ச்சியும்
|
ஒருகுலத்திலும் பிறவாமலும் இறவாமலும் உயிர்க்குயிராய்
நின்றாய்
எனத் தமிழி னியற்கையைப் புலப்படுத்தும் பகுதி போற்றத்தக்கது (19).
எழுத்துக்கள் பிறக்குமுறையை மக்கள்
|
|
|
|