|
75.
|
ஊனரச
மாறல்லா லுண்டோ செவிகளுண
வான நவரசமுண் டாயினாய் - ஏனோர்க் |
|
|
| 76. |
கழியா
வனப்பொன் றலததிக முண்டோ
ஒழியா வனப்பெட் டுடையாய் - மொழிவேந்தர் |
|
|
| 77. |
வாங்கு
பொருள்கோள் வகைமூன்றே பெற்றார்நீ
ஓங்குபொருள் கோள்வகையெட் டுள்ளாயே - பாங்குபெற |
|
|
| 78. |
ஓர்முப்பா
லன்றியைம்பா லுள்ளா யுனைப்போலச்
சீர்முப்ப தும்படைத்த செல்வரார் - சேரமான் |
|
|
| 79. |
தன்னடிக்
கண்டு தளைவிடுத்தா யேழ்தளையுண்
பொன்னடிக்குண் டென்பதென்ன புத்தியோ - என்னரசே |
|
|
| 80. |
திண்பா
வலர்க்கறிவாஞ் செந்தமிழாய் நின்றவுன்னை
வெண்பாவென் றோதுவது மெய்தானோ - பண்பேர் |
|
|
| 81. |
ஒலிப்பாவே
சங்கத் துகமூன் றிருந்தாய்
கலிப்பாவென் றோதல் கணக்கோ - உலப்பில் |
|
|
| 82. |
இருட்பா
மருண்மாற்றி யீடேற்று முன்னை
மருட்பாவென் றோதல் வழக்கோ - தெருட்பாப் |
|
|
| 83. |
பொருத்தமொரு
பத்துப் பொருந்துமுனைத் தானே
விருத்தமென்று சொல்லல் விதியோ - இருட்குவையை |
|
|
| 84. |
முந்தியொளி
யால்விலக்கு முச்சுடரென் பாருனைப்போல்
வந்தென் மனத்திருளை மாற்றுமோ - சிந்தா |
|
|
| 85. |
மணிகொடையின்
மிக்கதென்பார் வண்கொடையு முன்பேர்
அணியும் பெருமையினா லன்றோ - தணியும் |
|
|
| 86.
|
துலங்காரங்
கண்டசரந் தோள்வளைமற் றெல்லாம்
அலங்கார மேயுனைப்போ லாமோ - புலங்காணும் |
|
|
| 87. |
உன்னைப்
பொருளென் றுரைக்குந் தொறும்வளர்வாய்
பொன்னைப் பொருளென்னப் போதுமோ - கன்னமிட்டு |