பக்கம் எண் :

தமிழ்விடுதூது24


101.

மாண்பாயோர் தூதுசொல்லி வாவென்பே னென்வருத்தம்
காண்பாயென் பெண்மதிநீ காணாதே - ஆண்பனைநற்
 
102. பெண்பனையா யாக்கினையாற் பெண்களிலே காரைக்கால்
வண்பதியா ரௌவையென வந்துதித்தாய் - நண்பார்
 
103. திலகவதி யாருடனே சென்மித்தாய் மாடக்
குலதவதி யானத்தர் கூடல் - பலதவஞ்சேர்
 
104. மேனியார் கண்டிகையும் வெண்ணீறுங் கண்டுருகும்
மானியார் தேசிகனா வந்துதித்தாய் - ஞானியார்
 
105. துங்க மகவாகத் தோன்றி வளப்பகைக்குஞ்
சிங்கடிக்குந் தாதையாய்ச் சீர்செய்தாய் - இங்குநீ
 
106. பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையா லென்மனத்திற்
புண்களெல்லா மாறப் புரிகண்டாய் - ஒண்கமலத்
 
107. தன்னந் தனைவிடுப்பே னன்னந்தா னங்கவரை
இன்னந்தான் கண்டறியா தென்பரே - மன்னெந்தாய்
 
108. அப்பாலோர் வண்டை யனுப்பி னவர்காமம்
செப்பாதே யென்றாற் றிகைக்குமே - தப்பாது
 
109. மானைப்போய்த் தூதுசொல்லி வாவென்பேன் வல்லியப்பூந்
தானைப் பரமற்பாற் சாராதே - ஏனைப்பூங்
 
110. கோகிலத்தை நான்விடுப்பேன் கோகலமுங் காக்கையினம்
ஆகி வலியானுக் கஞ்சுமே - ஆகையினால்
 
111. இந்தமனத் தைத்தூதா யேகென்பே னிம்மனமும்
அந்தமனோ தீதர்பா லண்டாதே - எந்தவிதம்
 
112. என்றென் றிரங்கினே னென்கவலை யெல்லாம்பொற்
குன்றனையா யுன்னுடனே கூறுகேன் - சென்றாலும்
 
113. பண்ணிய பத்தொன் பதினா யிரத்திருநாற்
றெண்ணியதொண் ணூற்றொன் றெனுந்தொடையாய் - நண்ணி