|
114.
|
ஒருதொடை
வாங்கி யுதவாயோ வோர்சே
விருதுடை யார்க்குநீ வேறோ - தருமிக்கே |
|
|
| 115. |
ஓர்வாழ்க்கை
வேண்டி யுயர்கிழிகொள் வான்கொங்கு
தேர்வாழ்க்கை யென்றெடுத்த செய்தியும் - கீரன் |
|
|
| 116. |
இசையா
வகையி னியம்பினா னென்றே
வசையாடித் தர்க்கித்த வாக்கும் - இசையான |
|
|
| 117. |
பாட்டுக்
கிரங்கியொரு பாணனுக்குச் சேரலன்மேற்
சீட்டுக் கவிவிடுத்த சீராட்டும் - பாட்டியலில் |
|
|
| 118. |
நாத்திரமா
மேவுபொரு ணன்றா வறுபதெனும்
சூத்திரமாப் பாடியரு டோற்றமும் - மாத்திரமோ |
|
|
| 119. |
உன்னோ
டவர்விளையாட் டொன்றோ வடமதுரைக்
கந்நேர முன்பிறகே யார்வந்தார் - மன்னவன்மேற் |
|
|
| 120. |
காரியார்
நாரியார் கண்டகவி யைப்பகிர
வாரியிலாக் கானகத்தில் வந்தவரார் - நாரினொடும் |
|
|
| 121. |
போற்றியுறும்
பத்திரற்காப் போந்து கிழவுருவில்
தோற்றி விறகு சுமந்தவரார் - தேற்றியவற் |
|
|
| 122. |
கீயரிய
பொற்பலகை யிட்டவரார் மற்றவன்றன்
நேயமனை விக்கெதிரா நேர்ந்தவளைப் - போயவையில் |
|
|
| 123. |
தள்ளியிசை
தாபிக்கத் தக்கவரார் தென்மதுரைக்
குள்ளிருந்த சொக்கருனக் குள்ளன்றோ - எள்ளி |
|
|
| 124. |
வடமொழியில்
வேத வசனமே யீசர்
திடமொழியா மென்பார் சிலரே - அடரும் |
|
|
| 125. |
பரசமய
கோளரியாய்ப் பாண்டிநா டெங்கும்
அரசமய நீநிறுத்து மந்தாள் - விரசுநீ |
|
|
| 126. |
ஆதிக்கண்
வையையில்வே தாகமத்தைத் தாபித்தாய்
சோதிக்கி னேடகமே சொல்லாதோ - வேதத்தே |