பக்கம் எண் :

தமிழ்விடுதூது26


127. வாதவனங் கண்டா தடைத்தகத வந்திறந்தாய்
வேதவனங் கண்டால் விளம்பாதோ - வேதம்
 
128. அமிழ்தினுமிக் கென்னுமுனிக் கன்பருனைச் சொன்னார்
தமிழ்முனியென் னும்பேர்தா ராதோ - தமிழால்
 
129. அறம்பொரு ளின்பம்வீ டாரணர்சொன் னாரத்
திறம்பரமர் வாக்கேசெப் பாதோ - மறந்திடலில்
 
130. கற்பலகை யோதுமறை காணார்கீழ் நிற்கவுநீ
பொற்பலகை மேலிருந்தாய் போதாயோ - தற்பரரோ
 
131. டெண்ணிறந்த வாசியழைத் திட்டாய் சதுர்வேதப்
பண்ணிறைந்த வாசி பகராதோ - அண்ணலார்
 
132. தென்பா லுகந்தாடுஞ் செய்தியெல்லா முன்னிடத்தில்
அன்பாலென் றப்பாலு மாரறியார் - உன்பேர்
 

133.

பழியார் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்
மொழியார் குழறி மொழிவார் - அழியா
 
134. உருவால வாயிருக்கு மோதரிய முத்தித்
திருவால வாயிருக்குஞ் செல்வர் - ஒருமால்
 
135. வடமதுரை யேறுமுன்னே வந்தவடி வென்னத்
தடமதுரை மீனுயர்ந்த தாணு - படர்தீர்க்குஞ்
 
136. சத்திபுரத் தோர்பாற் றழைத்துமகிழ்ந் தோர்சீவன்
முத்திபுரத் தோர்பான் முளைத்தெழுந்தோர் - அத்திசைபோல்
 
137. ஆங்கோ ரிருநான் கயிரா வதஞ்சுமக்கும்
பூங்கோயிற் குள்ளுறைந்த புண்ணியனார் - பாங்காம்
 
138. இடம்பவன மீதாக விந்திரன்வந் தேத்துங்
கடம்பவன மீதிலுறை காந்தர் - அடும்பேர்
 
139. அலகம் பரிக்கு மரியார் முடிவேய்ந்
துலகம் பரிக்குமுறை யுள்ளார் - பலநாளும்