| 153.
|
தேடுநிழற்
சிந்தனையிற் றேம்பினேன் வெம்பனியால்
வாடிய செந்தா மரையொத்தேன் - ஓடமிசைக் |
|
|
| 154. |
கொள்ளம்பூ
தூரவெள்ளக் கொள்ளைகடந் தாயென்மால்
வெள்ளங் கடத்திவிட வேண்டாவோ - தள்ளென்று |
|
|
| 155. |
மாறிட்ட
சாக்கியரை வன்கழுவே றச்செய்தாய்
சீறிட்ட வேளையது செய்யாயோ - நீறிட்டே |
|
|
| 156. |
அங்கரும்பின்
கூனொழித்தா யன்றுவழு திக்குமதன்
செங்கரும்பின் கூனொழியச் செய்யாயோ - அங்கமுறு |
|
|
| 157. |
வெப்புநோய்
தீர்த்தாயவ் வேந்தனுக்கென் வெவ்விரக
வெப்புநோய் தீர்க்க விரும்பாயோ - தப்பலவே |
|
|
| 158. |
சாக்கிய
ரிட்டநஞ்சு தன்னையமு தாக்கினையின்
றாக்கிய நஞ்சையமு தாக்காயோ - நீக்கரிய |
|
|
| 159. |
வெந்தீக்குள்
ளேகிடந்தும் வேவாயென் பார்காமச்
செந்தீச் சுடாதிருக்கச் செய்யாயோ - வந்துகொங்கில் |
|
|
| 160. |
அப்பனியால்
வாடாதே யார்க்குத் துயரொழித்தாய்
இப்பனியால் வாடா திரங்காயோ - அப்பரை |
|
|
| 161. |
மைக்கடல்கொல்
லாதபடி வன்கன் மிதப்பித்தாய்
அக்கடல்கொல் லாமலுற வாக்காயோ - மிக்குயர்ந்த |
|
|
| 162. |
மன்றிற்
பனைவடிவ மாற்றினா யப்பனைமேல்
அன்றிற்புள் வேறொருபுள் ளாக்காயோ - தொன்றுதொட்டுத் |
|
|
| 163. |
தென்பொதியிற்
சாந்தினொடு தென்றலுற வாய்வந்தாய்
அன்புறவென் னோடுமுற வாக்காயோ - முன்பிருந்து |
|
|
| 164. |
பாடுமிசை
யெல்லாமுன் பாவையராச் சேர்த்தாயென்
னோடுமுனி யாதிருக்க வோதாயோ - பாடலாற் |
|
|
| 165. |
சின்னமொடு
காளஞ் சிவிகைபந்தர் முத்தடைந்தாய்
பொன்னே சுடாதணியப் பூட்டாயோ - முன்னிறந்தாள் |