| 179.
|
செவ்வழியே
செல்வாய்நீ செல்வழியி னல்வழிதான்
எவ்வழி யென்றா லியம்பக்கேள் - எவ்வழியும் |
|
|
| 180. |
வெல்வா
யுனைநினைந்து வேயுறு தோளியென்று
செல்வார்தங் காரியஞ்சித் திக்குமே - செல்வாய் |
|
|
| 181. |
தடையுண்டோ
வையாறு தன்னிலே பொன்னி
இடைவிலங்கச் சென்றதறி யேனோ - இடையிலே |
|
|
| 182. |
பாலைநில
நெய்தலாப் பண்ணினா யின்னுமதைச்
சோலைநில மாக்குவைநான் சொல்லுவதென் - மேலானார் |
|
|
| 183. |
கூறும்
பொதிசோறு கொண்டு வரினுனக்கு
வேறும் பொதிசோறு வேண்டுமோ - வீறாகக் |
|
|
| 184. |
கற்பார்
பொருள்காணார் காசுபணங் காணிலுனை
விற்பா ரவர்பானீ மேவாதே - கற்றாரை |
|
|
| 185. |
எள்ளிடுவார்
சொற்பொருள்கேட் டின்புறார் நாற்போலச்
சள்ளிடுவார் தம்மருகே சாராதே - தெள்ளுதமிழ்ப் |
|
|
| 186. |
பாயிரமுன்
சொன்ன படிபடியா மற்குழறி
ஆயிரமுஞ் சொல்வார்பா லண்டாதே - ஆய்தருநூல் |
|
|
| 187. |
ஓதி
யறியாத வொண்பே தையருடனே
நீதி முறையா நிகழத்துநூல் - பேதைமையாங் |
|
|
| 188. |
காணாதாற்
காட்டுவான் றான்காணான் கண்ணெதிரே
நாணா திராதே நவிலாதே - வீணாக |
|
|
| 189. |
ஆற்றி
னளவறிந்து கல்லா தவையஞ்சுங்
கூற்றினர்பா லேகாதே கூடாதே - போற்றாரை |
|
|
| 190. |
வேண்டாதே
கேடில் விழுச்செல்வங் கல்வியென்று
பூண்டாய்நீ தானே பொருளன்றோ - ஆண்ட |
|
|
| 191. |
வலவா
நலவா வடுதுறையி லுன்போல்
உலவாக் கிழிபெற்றா ருண்டோ - நலவிருப்ப |