|
192.
|
தாக்கவரு
செங்கலைப்பொன் னாக்கினாய் மண்முழுதும்
மாக்கனக மாக்கிவிட வல்லையே - நோக்குபுகார் |
|
|
| 193. |
பாடியதோர்
வஞ்சிநெடும் பாட்டாற் பதினாறு
கோடிபொன் கொண்டதுநின் கொற்றமே - தேடியருள் |
|
|
| 194. |
நல்லார்கட்
பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்டதிருக் கண்டாயே - கல்லார்பால் |
|
|
| 195.
|
ஏகாதே
யன்பிலா ரிந்திரன்போல் வாழ்ந்தாலும்
போகாதே யங்கே புசியாதே - மாகவிஞர் |
|
|
| 196. |
தாமின்
புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தாரென்றும் - மாமகிமை |
|
|
| 197. |
சேர்ந்ததுன்பா
லன்றோ திருப்பாற் கடலமுதம்
ஆர்ந்தவர்க்கல் லாதுபசி யாறுமோ - சேர்ந்துன்னை |
|
|
| 198. |
நம்பாதார்
வீதி நணுகாதே நல்லார்கள்
தம்பா லிருந்து தரித்தேகி - வம்பாகப் |
|
|
| 199. |
பின்போ
யமனோடப் பேர்ந்தோடும் வையையிலே
முன்போ யெதிர்போய் முழுகியே - அன்போடே |
|
|
| 200. |
தாழ்ந்துநீள்
சத்தந் தனைக்கற்றா ருள்ளம்போல்
ஆழ்ந்த வகழி யகன்றுபோய்ச் - சூழ்ந்துலகில் |
|
|
| 201. |
மேன்மே
லுயர்ந்தோங்கு வேதம்போன் மேலாக
வான்மே லுயர்ந்த மதில்கடந்து - போனால் |
|
|
| 202. |
மிருதிபுரா
ணங்கலைபோல் வேறுவே றாக
வருதிரு வீதிசூழ் வந்தே - இருவினையை |
|
|
| 203. |
மோதுஞ்
சிவாகமம்போன் முத்திக்கு வித்தாக
ஓதுந் திருக்கோயி லுட்புகுந்து - நீதென்பால் |
|
|
| 204. |
முன்னே
வணங்கி முறையினபி டேகமுனி
தன்னேயம் போலாந் தளவிசையும் - தன்னடைந்து |