|
205.
|
தேறும்
படிவர் சிவலோகஞ் சேர்ந்திருக்க
ஏறும் படிநிறுத்து மேணிபோல் - வீறுயர்ந்த |
|
|
| 206. |
கோமேவு
கோபுரமுங் கூடலின்மேன் முன்னொருநாள்
மாமேகஞ் சேர்ந்ததுபோன் மண்டபமும் - பூமேவும் |
|
|
| 207. |
மட்டளையும்
வண்டெனப்போய் மாளிகைப் பத்தியறைக்
கட்டளையுங் கண்டு களிகூர்ந்தே - இட்டமணிச் |
|
|
| 208. |
சிங்கா
தனத்திற் சிறந்ததிரு வோலக்கம்
எங்கா கிலுமொருவர்க் கெய்துமோ - பைங்கழல்சூழ் |
|
|
| 209. |
தேங்கமலத்
தேசு தெரிசனஞ் செய்தவர்க்கே
பூங்கமலக் கண்கொடுத்த புத்தேளும் - ஓங்கமல |
|
|
| 210. |
மையி
லடியில் வணங்காத் தலையொன்றைக்
கையி லளித்த கடவுளும் - மொய்யிழந்த |
|
|
| 211. |
மானந்
தனக்கு வகுத்தகடம் பாடவிக்கு
மானந் தனைவகுத்த வானவனுந் - தேனங் |
|
|
| 212. |
கணிமலர்த்தா
ணெஞ்சூ டழுத்தியழுத் தாதே
மணிமுடிக ணீக்கி வணங்கக் - கணநாதர் |
|
|
| 213. |
ஓதுதுனி
யோடுசின முற்றபகை செற்றமுரட்
போத முனிவர் புடைசூழத் - தீதில் |
|
|
| 214. |
அரிய
திசைப்பால ரத்தமுத றாங்கித்
தெரிசனக்கண் பார்த்தேவல் செய்யப் - பரவியே |
|
|
| 215. |
முன்னிருவ
ரெண்மரொடு மொய்த்த பதினொருவர்
பன்னிருவர் நின்று பணிசெய்ய - முன்னே |
|
|
| 216. |
நதிக
ளெனக்கண்டு நந்திபிரம் போங்க
உதகவிரு பாலி னொதுங்கிப் - பதினெண் |
|
|
| 217. |
குலத்தேவர்
தம்மகுட கோடிபதி னெட்டு
நிலத்தோர் முடியா னெரிய - நிலத்தே |