பக்கம் எண் :

தமிழ்விடுதூது34


231. உடுக்குலந்தங் கோக்குலமென் றுற்றறிந்தா லென்ன
அடுக்கிலங்கு தீபமெதி ராகக் - கடுத்திடேல்
 
232. வெங்கதிருண் டுன்குலத்து வெண்மதியுண் டென்னல்போல்
தங்கவா ரத்தீபந் தாமசையத் - துங்கவிடை
 
233. ஏங்குமொரு மீனுயர்த்தி னெங்கிருப்பே னென்பதுபோல்
ஆங்கிடப நீப மழன்றாட - நீங்கா
 
234. தருடா ம்ருகத்துரு வானார்க் குவந்தே
புருடா ம்ருகத்தீபம் போற்ற - மருவார்
 
235. வருகுலத்தார் பானு வரனடுக்குற் றென்ன
அருகுலவுந் தட்ட தசைய - இருசுடர்க்கும்
 
236. சொக்கருனைத் தானே சுடரென்று காட்டுதல்போல்
அக்கரா லத்தியொளி யாய்விளங்கத் - தக்கவளோ
 
237. டெற்கும் பயந்தொளித்தா ரென்றுகங்கை தேடுதல்போற்
பொற்கும்ப தீபமெதிர் போய்வளையச் - சொற்குருகும்
 
238. அற்பூரத் தொண்டர்க் கருண்முத்தி யீதெனல்போற்
கற்பூரத் தட்டிற் கனல்வாய்ப்பப் - பொற்பாக
 
239. நங்குலத்தும் வந்துதித்தார் நாதரென்று பானுமகிழ்ந்
தங்குறல்போற் கண்ணாடி யங்கணுற - இங்கரசர்
 
240. எங்குலத்தா ராயினா ரென்றுபிறை தோற்றுதல்போல்
துங்கமுடி மேற்குடைவெண் சோதிவிடப் - பொங்கியெழும்
 
241. முந்துகடல் வெண்டிரைகண் முன்னேமா மிக்காக
வந்தனபோல் வெண்சா மரையிரட்ட - விந்தைசெயும்
 
242. ஆடரவச் சித்தரிவ ராதலினா லாலவட்டம்
நீடரவம் போலவெதிர் நின்றாட - நாடகலா
 
243. வாலநறுந் தென்றனம் மன்னரென்று காண்பதுபோற்
கோல விசிறி குளிர்ந்தணுகக் - காலைத்