பக்கம் எண் :

தமிழ்விடுதூது35


244.

திருவனந்தன் முன்னாகச் சேவிக்குங் காலத்
துருவனந்த தேவ ருடனே - மருவியெதிர்
 
245. போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்னனுப்பித்
தோற்றரவு செய்து துதித்ததற்பின் - ஆற்றல்
 
246. அரிய சிவாகமத்தோ ராதிசைவர் தம்பால்
உரிய படையா வொதுங்கி - அருமையுடன்
 
247. மூவர் கவியே முதலாங் கவியைந்தும்
மூவராய் நின்றார்தம் முன்னோதி - ஓவாதே
 
248. சீபாத மெண்ணாத தீயவினைப் பாவிசெய்த
மாபாத கந்தீர்த்த மாமருந்தைத் - தீபமணிப்
 
249. பைந்நாகஞ் சூழ்மதுரைப் பாண்டியனே பாரமணிக்
கைந்நாகஞ் சூழ்கோயிற் கண்மணியே - மன்னாக
 
250. மைக்கட் கரும்பை மருவிப் பிரியாத
முக்கட் கனியே முழுமுதலே - மிக்கபுனற்
 
251. கங்கா நதிக்கிறையே கன்னித் துறைக்கரசே
சிங்கா தனத்துரையே செல்வமே - எங்கோவே
 
252. நாடவிளை யாடிவந்த நற்பாவை போலடியார்
கூடவிளை யாடிவந்த கோமானே - தேடரிய
 
253. சிந்தைமகிழ்ந் தன்புடையார் தேடியநா ளோடியெதிர்
வந்தவிளை யாட்டினிமேல் வாராதோ - வந்தருளால்
 
254. பாவும் புகழ்சேர் பழிக்கஞ்சி யென்றுலகில்
மேவும் பெயரினிமேல் வேண்டாவோ - ஆவலினால்
 
255. புக்குவந்தார் தம்மேற் பொடிபோட் டுளமயக்கிற்
சொக்கலிங்க மென்றெவருஞ் சொல்லாரோ - இக்கணைத்த
 
256. அங்கைவே டானே யரசாள வுஞ்சிறிய
மங்கைதனைக் கோட்டிகொளல் வல்லமையோ -
                                  கங்கையெலாம்