| 257.
|
நல்லமைக்கண்
ணூடுவர நல்குதியே னங்கையெல்லாம்
வல்லசித்த ரென்றழைக்க மாட்டாளே - நல்லவர்போல் |
|
|
| 258. |
மைக்குவளைக்
கண்ணி வளைகவர்ந்து மங்கையர்தங்
கைக்குவளை விற்கக் கணக்குண்டோ - திக்குவளை |
|
|
| 259. |
தோட்டாரும்
வேம்பாய்த் தொடர்ந்துதொடர்ந் தேயொருதார்
கேட்டாரும் வேம்பாகக் கேட்டோமே - நாட்டமுற |
|
|
| 260. |
வேளையெரித்
தாய்க்கியல்போ மின்னார் கலைகவர்தல்
காளை யிடையிருந்து கற்றதோ - மீளாது |
|
|
| 261. |
சென்றிலகு
நாரையன்று சென்றசிவ லோகத்தே
இன்றெனையங் கெய்தவிட லாகாதோ - அன்றியழற் |
|
|
| 262. |
குன்றே
விருத்த குமார ரிளம்பாலர்
என்றேயோர் பெண்வீட் டிருக்கலாஞ் - சென்றொருநாள் |
|
|
| 263. |
பொன்னனையாள்
வீடும் புகுந்திருக்க லாமெனினென்
பொன்னனையாள் வீடும் பொருந்தாதோ - என்னுமொழி |
|
|
| 264. |
எல்லாந்
திருச்செவியி லேறும் படியுரைக்க
வல்லாயுன் போலெவர்க்கு வாய்க்குமே - நல்லாள் |
|
|
| 265. |
கருணைவிழி
யாளங் கயற்கண்ணி தன்னோ
டருள்புரிய வாழ்ந்திருக்கு மையர் - திருமதுரை |
|
|
| 266. |
தானே
சிவராச தானியென்று வீற்றிருந்தால்
தேனேநம் பாக்கியத்தின் செய்தியே - ஆனமையால் |
|
|
| 267. |
அந்தரலோ
கத்தின்மே லானதிரு வாலவாய்ச்
சுந்தர மீனவனின் சொற்படியே - வந்து |
|
|
| 268. |
துறவாதே
சேர்ந்து சுகாநந்த நல்க
மறவாதே தூதுசொல்லி வா. |