முதலையுண்ட
பிள்ளையைப் பின் ஈன்று தரச் சொல்லினிசைத்தோர்
சுந்தரமூர்த்தியாவர். கரைக் கான் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு
காலனையே என்பது அவர் பாடல். அடியை முடியாப் படைத்தோர் என்றது
திருநாவுக்கரசரை. திருநல்லூரில் அப்பர் திருக்கோயிலிற் கண்வளரும்போது
சிவபெருமான் வந்து தம் திருவடியை முடியில் வைத்தனர் என்பது வரலாறு.
அதற்கு அறிகுறியாக அவ்வூரில் திருவடிநிலை உள்ளது. தாழம்பூ பிரமனுக்குச்
சான்றாக வந்து பொய்கூறியதென்பதும் அன்றுமுதல் தாழம்பூவை முடியிற்
புனையாது விடுத்தார் சிவபெருமான் என்பதும் பண்டை வரலாறு. மட்டு -
தேன். ஓலைப்பூ - தாழம்பூ. பனையோலையை நீளமாக ஒன்றுபோலச்
சேர்ப்பதை வார்ந்து என்றார். பட்ட + ஓலை = பட்டோலை வார்ந்து
சேர்த்து பட்டோலை எழுதிக் கொள்ளப் பகர்ந்தோர் எனக் கூட்டுக.
பகர்ந்தோர் - மணிவாசகர். சிவபெருமான் ஒரு மறையவர் போலுருவங்
கொண்டு தில்லையில் மணிவாசகப் பெருமான்பால் வந்து நின்று பாவை
பாடிய வாயாற் கோவைபாடுக என்றிரந்து கோவைப்பா நானூறும் ஓலையில்
வரைந்து கையெழுத்திட்டு வைத்து மறைந்தனர் என்பது அன்னார் வரலாற்று
நிகழ்ச்சி இது தமிழ் விடுதூது ஆதலின் தமிழை முன்னிலைப்படுத்துச்
சொக்கநாதர்மீது காதல் கொண்ட தலைவி கூறுவதாகப் பொருளமைந்துள்ளது.
தமிழே என (கண்ணி 62) வந்துள்ள விளியை முதலில் வைத்துப் பொருள்
கூட்டுக. தமிழே சங்கப்புலவர் இறையனாரும், தடாதகைப் பிராட்டியாரும்,
கணபதியும், படைவேளும், சம்பந்தரும், சுந்தரரும், நாவுக்கரையரும்,
மணிவாசகரும் எல்லாரும் நீயா யிருந்தமையால் (கண்ணி 15) எனக் கூட்டுக.
8 - 15 : முட்டாதே....................யிருந்தமையால்
(பொ - ரை.)
தடைபடாமல் குறையாத பெருமைத் தமிழ் மூன்றினையும்
ஓதிய பெரிய முனிவனும், தொல்காப்பியம் என்ற இலக்கணத்தைக் கூறிய
பழைய முனிவனும், குறையாத சொல்லமைந்த பாவின் நிலைமையைக்
கொண்டு முதல்வன்பாற் செல்லும் உயிர்களை (அவற்றின் இயலை)
பன்னிரண்டு
|
|
|
|