நூற்பாவைக் கொண்டு
முடித்த தூய்மையுடையவரும், இருவிழிகளாகிய
குற்றமில்லாத கவிதை பாடும் திருமாளிகைத் தேவர் முதலிய முனிவர்
யாவரும், குலத்தாலும் உற்ற சூழ்ச்சியாலும் நீங்காத உயிர்களைச் சாரும்
வினைகளையெல்லாம் தாம் சாற்றிய மந்திரம் என்ற நூலினால் நீக்கிய
வல்லவரும், செந்தமிழிற் பொய்யடிமையில்லாத புலவரென்று புலவர்களாற்
புகழ்ந்து கூறப்பட்ட உண்மைத் தொண்டராகிய சங்கப் புலவர்களும், ஐயடிகள்
காடவர்கோன் என்பவரும், செம்மையான (திருத்தமான) சொற்களையுடைய
கழறிற்றறிவார் என்பவரும், பாடுவதற்கு அருமையான தெய்வமொழிப்
பாவலரும், ஆராய்தற்கு அருமையான கல்லாத மூடர்கட்குச் சிங்கம் போன்ற
கல்வி கேள்வியிற் சிறந்த எல்லாரும் நீயாயிருந்தமையால்.
(வி - ம்.)
ஒல்கா - குறையாத. தமிழ் மூன்று - இயல், இசை, நாடகம்.
இவற்றை முதலில் ஓதியவர் அகத்தியர். தொல்லை + முனி = தொன்முனி.
தொல்லை - பழமை, தொன்முனி: தொல்காப்பியர். அல்கா - குறையாத.
மல்கா எனப் பிரித்து நிறையாத எனப் பொருள் கொள்ளலுமாம். திரம் -
உறுதிநிலை. பாவின் உறுதி கொண்டு, நிலைகொண்டு என்க. பதி - கடவுள்.
பசு - உயிர். கடவுள்பாற் செல்லும் உயிரைப் பன்னிரண்டு நூற்பாக்களைக்
கொண்டு அமைத்தவர். இவர் மெய்கண்ட தேவர். தலைவன்மேற் பாயும்
பசுவைப் பன்னிரண்டு கயிற்றாற் கட்டியவர் என மற்றொரு பொருளும்
வெளியே தோன்றிற்று. இதனைத் தொனிப்பொருள் என்பர். நேத்திரம் - கண்.
கண்ணாக விளங்குங் கவிதைகள் பாடிய திருமாளிகைத் தேவர் முதலிய
முனிவர் என விரித்துக் கொள்க. திருவிசைப்பா திருப்பல்லாண்டு பாடிய
ஒன்பதின்மரையும் ஈண்டுக் கொள்க. திருமாளிகைத்தேவர், சேந்தனார்,
கருவூர்த்தேவர், காடவர் கோன் பூந்துருத்தி நம்பி, கண்டராதித்தர்,
வேணாட்டடிகள், திருவாலி அமுதனார், புருசோத்தம நம்பி, சேதிராயர்
என்பவர். சாதி - குலம்; உயர்வு. தந்திரம் - நூல்; சூழ்ச்சி. திருமந்திரம் என்ற
நூலாற் சார்வினையை யொழித்த வல்லோர் எனக் கூட்டுக. இவர் மூலர்.
சங்கத்து மேலோர்; சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மர். கபிலர், பரணர்,
|
|
|
|