நக்கீரர் முதலியவர்கள்
எனக் கொள்க. ஐயடிகள் காடவர் கோன்: சேத்திரத்
திருவெண்பாப் பாடியவர். கழறிற்றறிவார் சேரமான் பெருமாணாயனார்.
அயலார் கூறியவற்றையெல்லாம் இருந்த விடத்திலேயே அறியும் அறிவு
இறைவனாலருளப்பட்டது ஆதலின் இவர் கழறிற்றறிவார் என்ற பெயர்
பெற்றார். கழறிற்று - சொல்லியசொல். தெய்வ மொழிப் பாவலர் என்றது
வள்ளுவரை. தேவர் எனவும் தெய்வப் புலவர் எனவும் இவர் பெயர்
வழங்குவதறிக. கல்லாதார்க்குச் சிங்கம் என்று சொல்லும்படியிருக்கும்
எல்லாரும் என்று விரித்துக் கொள்க. எனவே சங்கத்திருந்தோர் முதலாகத்
தெய்வப் பாவலர் இறுதியாகக் கல்வி கேள்விக்குரியவர் எல்லாரும்
நீயாயிருந்தமையால் எனத் தமிழ்மொழியை உயர்த்தினர் தமிழேயுருவமாக
இருந்தனர் எல்லாரும்; நீ வேறு அவர்கள் வேறாக எண்ணற்க
இடனில்லையென்பது கருத்து. தமிழே எனப் பின்னர் (கண்ணி 62)
வருவதை முன்னர் வைத்துப் பொருளுரைக்க.
15 - 16 : சொல்லாரும்....................போற்றினேன்
(பொ - ரை.)
புகழ் நிறைந்த எனக்கு வாய்த்த தெய்வமே உன்னைக்
கண்டு துதித்தால் என் குறைகள் எல்லாம் நீங்கும் என்று கருதி நின் பொன்
போன்ற திருவடிகளையே புகலாகக் கொண்டு போற்றுகின்றேன்.
(வி - ம்.)
சொல் ஆரும் சொற்கள் நிறைந்த என்றும் ஒரு பொருள்
கூறலாம். பொன் அடி அழகிய அடி எனவும் பொருள் தரும். போற்றினேன்
- வணங்குகின்றேன்; துதிக்கின்றேன். இது பின்வருமாறு துதிப்பதை
யுணர்த்தியதாம்.
16 - 19 : பன்னியமென்..................வந்தாய்
(பொ - ரை.)
நெருங்கிய மெல்லிய பஞ்சியால் நூற்கப்படாத நூலே!
பலரால் நெருடப்படாத பாவே! கிழிந்து குறைந்து அழுக்குப்படாத இயல்புள்ள
கலையே! மிஞ்சிய நிறம் தோயாத செந்தமிழே! சொல்லினை ஏராகக்
கொண்டுழும் புலவர் மனம் கருகாது சொல்லை விளைக்கும் செய்யுளே! ஒரு
குலத்தினும்
|
|
|
|