(வி
- ம்.) புண்ணியம் - அறம்; தூய்மை. புண்ணியஞ் சேருந்தி என்றது
நிறையுயிரின் உந்தியை. முற்செய்த புண்ணியமுடையவரே எண்வகை
யுறுப்புக்குறை நீங்கிப் பிறப்பார் என்ற கருத்தினையுட் கொண்டது. உறுப்புக்
குறைவில்லா உடம்பின் உந்தி எனக் கொள்க. உறுப்புக் குறைவுடைய
உடம்பின் உந்தியினின்று வளி மேலெழினும் எழுத்துவடிவமாகத் தோன்றாது
என அறிக. பவணந்தி முனிவர் ிறையுயிர் முயற்சியின் என்றதும்
அக்கருத்தினை விளக்கும். வளி - காற்று. இது உதானன் என்ற
காற்றினையுணர்த்தும். பிராணன், அபானன், சமானன், உதானன், வியானன்,
நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன் எனப் பத்துவகை
எனவும், அவைகள் இன்ன இன்னவிடங்களின் நிற்கும் எனவும்; உதானன்
என்னும் காற்று உந்தியில் நிற்கும் என்றும் காற்றினியல் கூறும் தத்துவ நூல்
கூறுவது காண்க. உந்தி - கொப்பூழ். உந்தியிற் றோன்று முதான
வளிப்பிறந்து, கந்தமலி நெஞ்சுதலை கண்டத்து - வந்தபின், நாசிநாவண்ண
மிதழெயிறு மூக்கெனப், பேசுமெழுத்தின் பிறப்பு என்பர் நேமிநாத
நூலுடையார். ிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப, வெழுமணுத் திரளுரங்
கண்ட முச்சி, மூக்குற் றிதழ்நாப் பல்லணத் தொழிலின், வெவ்வேறெழுத்தொலி
யாய்வரல் பிறப்பே என்ற நன்னூற் கருத்தும் நோக்குக. வாக்கு நான்கு
வகைப்படும்; பரை, மத்திமை, வைகரி, பைசந்தி என. நன்னூலிலக்கணத்தின்படி
சார்பெழுத்து முந்நூற்றறுபத்தொன்பதாம், தொல்காப்பியத்தின்படி மூன்றாம்,
உயிர்மெய் யெழுத்துக்களைக் கூட்டினும் இருநூற்றுப் பத்தொன்பதாம்.
இந்நூலாசிரியர் இலக்கண விளக்கம் என்ற நூலிற் கூறியபடி தொகை
காட்டினர். அந்நூலுள் உயிர்மெய் இருநூற்றுப் பதினாறு; உயிரளபெடை 7,
ஒற்றளபெடை 11, குற்றியலுகரம் 1, குற்றியலிகரம் 1, ஆய்தம் 1, ஐகாரக்
குறுக்கம் 1, ஒளகாரக் குறுக்கம் 1, மகரக் குறுக்கம் 1 எனப் பகுத்துத்
தொகுத்து இருநூற்று நாற்பது என எண்ணிய முறையறிக (சூத். 5).
எழுத்துக்களின் பிறப்பு மக்கட் பிறப்புப்போல வெளிப்படுமாறு வளிதரித்து,
கருப்பமாய், வண்ணத்துருவாய்த்
|
|
|
|