பக்கம் எண் :

விளக்கவுரை44


தலைதிரும்பிப் பிறந்தாய் என வமைத்திருக்கும் சொன்னயங் காண்க.

     22 - 27 : மேற்படவே.......................படிப்பிப்பாருண்டோ

     (பொ - ரை.) இவ்வாறு நீ பிறந்ததற்கு மேற்பட்டு எண் முதலாகச்
சொல்லும் பன்னிரண்டு பகுதிகளாகச் செய்து மண்ணுலகிற் பிறந்த
முதன்மையுடையோர் வளர்க்குங்காலத்தில் ஆசிரியர்கட்குக் கண்மணிபோல்
விளங்கிப் பள்ளிக்கூடத்தில் அசையாம் பலப்பல தொட்டில்களிற் படுப்பித்துச்
சிறுவர் கூடித் தள்ளித் தாலாட்டி உள்ளிடம் விளங்கும்படி மஞ்சளாற்றேய்த்துக்
கழுவி மையிட்டு மூன்று பாலும் மிகுதியாகப் புகட்ட உயர்ந்து வளர்ந்தாய்.
மைந்தர்களையே பத்துப் பருவமாக்கி நீ வளர்க்கின்றாய்; அத்தகைய இயல்பு
வாய்ந்த நின்னையொருவரால் வளர்த்துவிடக் கூடுமோ? கூடாதன்றோ?
முதலில் நினைக்கும் கல்வியெல்லாம் நின்பாலே யுள்ளனவெனவுணர்ந்து
நின்னைப் படிக்கும் இயல்புடையவரே மனிதர் எல்லாரும். உனக்குக்
கற்பிப்பவர் ஒருவருண்டோ? இல்லை.

     (வி - ம்.) எண் முதலாக ஈராறு பருவம் என்றது: “எண் பெயர்
முறைபிறப் புருவ மாத்திரை, முதலீ றிடைநிலை போலியென்றா, பதம்புணர்
பெனப்பன் னிருபாற் றதுவே” என நன்னூலார் எழுத்திலக்கணம் பன்னிரு
பகுதியுடையது எனப் பிரித்தமையைக் குறித்தது. மண் முதலோர் என்பதை
மண்ணிலுள்ள முதன்மையுடையார் என விரித்துப் புலவர்க்குப் பொருத்துக.
அசை என்பது ஏட்டுச் சுவடிகளைத் தூக்கும் பலகையாம். அசையாம்
தொட்டில் என உருவகமாகக் கொள்க. தால் ஆட்டி - நாவினால் அசைத்து.
(ஒலித்து). அ, ஆ, இ, ஈ என ஒலிப்பதைக் காட்டிற்று. அஃது, பண்டைக்
காலத்து ஏட்டுச் சுவடிகளில் எழுத்தெழுதி அவை நன்கு விளங்குவதற்கு
மஞ்சளையரைத்துப் பூசுவதும் கரியைக் கரைத்துப் பூசுவதும் வழக்கமாம்.
இக்கருத்துக் குறிப்பால் விளங்க “ஞ்சட் குளிப்பாட்டி மையிட்டு” என்றார்.
மையிடுதல் - கரிபூசுதல் முப்பால்: அறம், பொருள், இன்பம் என்ற
பொருள்களை. சிறுவர்கட்கு ஊட்ட அதனால் நீ பெருகினை யெனத்